- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் முருகப்பெருமான் மந்திரம்

வெற்றி தரும் முருகப்பெருமான் மந்திரம்

- Advertisement -

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத்தில் இருந்து ஒரு பாடலை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனால் அதற்கு முன்பாக ஒரு சின்ன பயனுள்ள தகவலையும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு பிடித்திருந்தால் இதை ஏற்றுக் கொள்ளலாம். இன்று முருகரிடம் சென்று, நல்ல வேலை கிடைக்கவில்லை என்று கேட்கின்றோம். நல்ல வேலையை முருகன் கொடுத்து விடுகின்றான்.

ஒரு மாதம் கழித்து சம்பள உயர்வை கேட்போம். அதையும் முருகப்பெருமான் நமக்கு வரமாக கொடுத்து விடுவான். பிறகு நல்ல மனைவி அல்லது நல்ல கணவர் தேவை என்று கேட்போம். அதையும் முருக பெருமான் தந்துவிடுவார். பிறகு குழந்தை செல்வம், பிறகு வீடு வாசல் வாகனம் என்று கேட்போம்.

- Advertisement -

எல்லாவற்றையும் முருகப்பெருமான் நமக்கு வாரி வாரி கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. முருகனிடம் எத்தனை முறை சென்று யாசகமாக வரங்களை கேட்டாலும் அவன் இல்லை என்று ஒருநாளும் மறுத்தது கிடையாது.

ஒரு நாள் கோவிலுக்கோ அல்லது ஏதோ ஒரு பொது இடத்திற்கு செல்கின்றோம். யாசகம் கேட்பவர்களில் ஒருவர் முதலில் வந்து நம்மிடம் பணம் வாங்கி விட்டார். நாமும் தானம் செய்து விட்டோம். நம்மிடம் சில்லறையை வாங்கிக் கொண்டவர், மீண்டும் வந்து நம்மிடம் கை நீட்டினால் என்ன சொல்லுவோம். ‘இப்போதுதானே பத்து ரூபாய் வாங்கினாய்’ மீண்டும் வந்து எதற்கு பணம் கேட்கிறாய் என்று கேள்வியை எழுப்புவோம்.

- Advertisement -

நாம் மட்டும் முருகப்பெருமானிடம் அடுத்தடுத்த யாசகங்களை மீண்டும் மீண்டும் கையேந்தி கேட்கின்றோம். முருகப்பெருமான் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். நம்மிடம் ஒரு முறை யாசகம் கேட்டு பணம் பெற்றவர், இன்னொரு முறை வந்து பணம் கேட்டாலே கொடுக்க நமக்கு மனம் வரவில்லை.

அப்போது முருகப்பெருமான் மட்டும் எதற்கு நமக்கு மீண்டும் மீண்டும் வரம் தர வேண்டும். சற்று இந்த விஷயத்தை சிந்தித்து பாருங்கள். உங்களுக்கே புரியும். சரி வெற்றி கடவுள் முருகப்பெருமானை எந்த பாடலை பாடி வழிபாடு செய்தால் நமக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பின் சொல்லக்கூடிய இந்த பாடல் வரிகளை படித்துவிட்டு உங்களுடைய வேலையை தொடங்குங்கள். காலையில் இந்த மந்திரத்தை படிக்க நேரம் கிடைக்கவில்லை என்றால் மாலை நேரத்தில் படிக்கலாம் .முருகன் கோவிலுக்கு சென்றும் படிக்கலாம்.

கந்தர் அலங்கார பாடல் வரிகள்:

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

இதையும் படிக்கலாமே: அனைத்து செல்வங்களும் கிடைக்க மகாலட்சுமி வழிபாடு

இந்த பாடல் வரிகளை படிக்க படிக்க உங்கள் வாழ்க்கையில், வேலையில், இருக்கக்கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அந்த முருகப்பெருமான் உங்களுடனே இருந்து நல்வழியை காண்பித்துக் கொடுப்பான். அதேபோல உங்களிடம் வந்து யாராவது உதவி என்று கேட்டால், அவர்கள் உண்மையிலேயே கஷ்டத்தில் இருப்பவர்களாக இருந்தால், மறுக்காமல் உதவி செய்து பழகுங்கள். நீங்கள் செய்யக்கூடிய உதவியின் மூலமாகத்தான் அந்த கந்தக் கடவுள் உங்களுக்கு கருணை காண்பிப்பான். தரிசனத்தையும் கொடுப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்