- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் கந்தன் வழிபாடு

கடன் தீர்க்கும் கந்தன் வழிபாடு

- Advertisement -

கடன் பிரச்சனை நம் வீட்டுக்குள் வந்து விட்டால், நம் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை சந்தோஷங்களும் நம்மை விட்டு வெளியேறிவிடும். முன்பெல்லாம் நம்முடைய வருமானத்திற்கு ஏற்ப தேவையை அடக்கிக் கொண்டார்கள். இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் தேவைக்கு ஏற்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. இதனால் வாழ்க்கை ஒரு ஓட்டத்தோடு இருக்கிறது.

நிம்மதியாக உட்கார்ந்தோமா, பிள்ளைகளிடம் கணவரிடம் பேசினோமா, என்ற சந்தோஷத்திற்கு எல்லாம் நேரம் கிடையாது. இப்படி எல்லாம் சம்பாதித்து எதை சாதிக்க போகின்றோம். திரும்பி பார்க்கும் போது சந்தோஷம், இளமை, குடும்பம், வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து, பத்தாததற்கு பல வியாதிகளை வாங்கி, பணத்தை தேடி சென்றது மட்டும்தான் மிஞ்சி இருக்கும். பணம் பணம் என்று மட்டும் ஓடாதீங்க. பணத்திற்கு இடையில் குடும்பத்தையும் சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனிங்க.

- Advertisement -

27 வாரம் திருச்செந்தூர் முருகன் வழிபாடு

சரி பிரச்சனை வந்துவிட்டது. இப்போது இந்த கலியுகத்தில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவது எப்படி. கடன் பிரச்சனையிலும் சந்தோஷத்தை இழக்காமல் வாழனும். அதற்காக கடன் கொடுத்த வரை ஏமாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. சந்தோஷத்தோடு பணத்தை சம்பாதித்து, கடனை அடைக்கலம். அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? நிச்சயம் இருக்கு திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாடு தான் இதற்கு ஒரே வழி.

செவ்வாய்க்கிழமை அதிகாலயில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்திருக்க வேண்டும். பூஜை அறையில் திருச்செந்தூர் முருகப் பெருமானை நினைத்து விளக்கு ஏற்றி வையுங்கள். ஒரு சிகப்பு துணி எடுத்து உங்கள் முன்பாக விரித்துக் கொள்ளுங்கள். கையில் வெறும் 1 ரூபாய் எடுத்துகோங்க.

- Advertisement -

அந்த ஒரு ரூபாயை வலது உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுடைய தலையை 27 முறை சுற்ற வேண்டும். இப்படி சுற்றும் போது ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை சிவப்பு துணியில் வைத்து முடிந்து முருகரின் பாதத்தில் வைத்து விடுங்கள். 27 செவ்வாய்க்கிழமை, 27 ஒரு ரூபாய் இப்படி சேர்ந்திருக்கும் அல்லவா.

அதே சிவப்பு நிற துணியில் ஒவ்வொரு ரூபாயாக தலையை சுற்றி மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையும் வைத்து வரவேண்டும். 27 ஆவது வார செவ்வாய்க் கிழமை இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள், உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்திருக்கும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்திருந்தால் கடன் பிரச்சனை முடிந்துவிட்டதா, முருகா என்று முருகனின் பாதத்தை போய் சரணாகதி அடையுங்கள்.

- Advertisement -

கூடுமானவரை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு, வீடு திரும்புங்கள். பழைய கடனையும் அடைத்திருப்பீர்கள், புதுசாக கடன் வாங்காமல் இருக்கக்கூடிய நல்ல காலமும் உங்களுக்கு பிறந்துவிடும். இந்த எளிமையான வழிபாடு நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டத்தைப் போக்கும் வாராஹி வழிபாடு

27 வாரத்தில் நடுவில் ஒரு வாரம் கூட இடைவெளி விடக்கூடாது. பெண்களால் இந்த வழிபாட்டை செய்ய முடியாத சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அல்லது கணவர் இந்த பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெரவும்.

சற்று முன்