- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டத்தைப் போக்கும் வாராஹி வழிபாடு

கஷ்டத்தைப் போக்கும் வாராஹி வழிபாடு

- Advertisement -

சில பேருடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் உச்சகட்டத்தில் இருக்கும். இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால், இதோடு என்னுடைய வாழ்க்கை முடிந்தது. அதற்கு மேல் என்னால் வாழவே முடியாது என்ற கஷ்டத்தில் நீங்கள் இருந்தாலும், உங்களை உடனடியாக காப்பாற்றக் கூடிய சக்தி இந்த வாராஹி தாய்க்கு இருக்கு.

வாராஹி வழிபாட்டை செய்பவர்களை அவள் எந்நாளும் கைவிட்டதே கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய துக்கங்கள் தோஷங்கள் வியாதிகள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் வாராகியை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான முறை இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

கஷ்டம் தீர்க்கும் வாராகி வழிபாடு

நீங்க இப்ப வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் வாராகியின் திரு உருவப்படம் இல்லை என்றாலும் பிரச்சனையே கிடையாது. இந்த வழிபாட்டை செய்யலாம். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பன்னீர் புஷ்பங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் அம்பாளை வாராகி ஆக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த பன்னீர் புஷ்பங்களை அம்பாளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

ஓம் பாப நாசின்யை நமஹ!
ஓம் துக்க நாசின்யை நமஹ!
ஓம்ம் ரிபு நாசின்யை நமஹ!
ஓம் தோஷ நாசினியை நமஹ!
ஓம் வியாதி நாசினியை நமஹ!

- Advertisement -

மந்திரம் இவ்வளவுதான். இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே வாசனை நிறைந்த பன்னீர் புஷ்பங்களால் வராகி தாய்க்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தீர்கள் என்றால் உங்களது எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தீர்ப்பதற்கு அந்த அம்பாள் ஓடோடி வந்து விடுவாள். ஆனால் நியாயம் உங்கள் பக்கம் இருக்க வேண்டும். நீங்கள் யாரையும் ஏமாற்ற கூடாது.

நேர்வழியில் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடப்பவர்களாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் சரி, அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஏதாவது ஒரு மனித ரூபத்தில் வந்து இந்த வாராகித்தாய் உங்களுக்கு உதவி செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

குறிப்பிட்ட இந்த பிரச்சனை சரியாக மட்டும் தான் நீங்கள் வாராகிய கும்பிட வேண்டும் எந்த கட்டாயமும் கிடையாது. எந்த பிரச்சினையையும் நீங்கள் வாராகி தாயிடும் சொல்லி விமோசனம் கேட்கலாம். உங்கள் அம்மா போல அவள் செவி கொடுத்து உங்கள் கஷ்டங்களை கேட்பாள். நான்கு பக்கமும் மூடி இருக்கக் கூடிய கதவை திறக்கக்கூடிய சக்தி இந்த வாராகித் தாய்க்கும் மட்டும்தான் இருக்கிறது. பிரச்சினைகள் இருந்தால் மனதை பலவீனமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி விலக 16-07-2024 அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

வாராகியின் பெயரை சொன்ன உடனே உங்களுக்கு மன உறுதி வந்துவிடும். கலங்காமல் இந்த வழிபாட்டை செய்ய தொடங்குங்கள். நாள் கிழமை நேரம் நட்சத்திரம் எதுவுமே தேவையில்லை. வராஹியை சரண் அடைந்து விட்டால் உங்களுக்கு கஷ்டம் அந்த நொடி பொழுதே தீர்ந்துவிடும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்