- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி மாத கரிநாள் சிறப்பு

ஆடி மாத கரிநாள் சிறப்பு

- Advertisement -

நாளை ஆடி மாதத்தில் வரப்போகும் கரிநாள். இந்த நாளை பற்றிய சிறப்பை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆடி மாதம் வரும் கரிநாளில் குறிப்பிட்ட இந்த நேரத்தில், நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டினால், அந்த கடனை சீக்கிரமாக திருப்பித் தரக்கூடிய யோகம் வரும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்று ஆடி முதல் நாள்.

நாளை ஆடி 2 ஆம் நாளே, ஆடி மாத கரிநாள் வரவேற்கின்றது. அது மட்டுமல்லாமல் ஆடி 10 ம் தேதியும் இந்த கரிநாள் இருக்கிறது. இந்த இரண்டு நாளில் எந்த நேரத்தில் வட்டி பணத்தை திருப்பிக் கொடுத்தால் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் மீள முடியும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கடன் தீர்க்கும் கரிநாள் பரிகாரம்

இந்த வருடம் ஜூலை 18ஆம் தேதி ஆடி 2, வியாழக்கிழமை கரி நாள் இருக்கிறது. காலை 10:45 – 11:45 இந்த நேரத்திற்குள் நீங்கள் வட்டி பணத்தை திருப்பிக் கொடுக்கலாம். ஜூலை 26, ஆடி 10 ம் நாள், வெள்ளிக்கிழமை காலை 9:05 – 10:15 மணிக்குள் நீங்கள் வட்டி பணத்தை திருப்பிக் கொடுக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் யாரிடம் கைநீட்டி பணம் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த பணத்திற்கான வட்டித் தொகையை திருப்பி செலுத்தினால், நீங்கள் வாங்கி இருக்கக் கூடிய அசல் தொகையை சீக்கிரம் திருப்பிக் கொடுக்கக்கூடிய யோகம் கிடைக்கும்.

வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் நீங்கள் கடன் வாங்காமல் இருப்பீர்கள். மீண்டும் மீண்டும் வட்டிக்காக உங்கள் பணத்தை இழக்காமல் இருக்கலாம். அப்படி ஒரு சக்தி ஆடி மாத கரி நாளுக்கு இருக்கிறது. எந்த ஒரு செயலை செய்தாலும், எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் அதில் கடவுளின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

அதனால் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு அந்த வட்டி பணத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள். அம்பாளையும் குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த வட்டி பணத்தை கொண்டு போய் யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுத்து விடுங்கள்.

இந்த நேரத்தில் நீங்கள் நேரே சென்று தான் இந்த வட்டி பணத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. Gpay பண்ணலாம், அல்லது அவர்களுடைய வங்கிக் கணக்கில் நீங்கள் பணத்தை சேர்க்கலாம். இப்படி ஏதாவது ஒரு வகையில் அந்த வட்டி தொகையை நீங்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை நீங்கள் வட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஐந்தாயிரம் ரூபாயில், வெறும் ஆயிரம் ரூபாய் வட்டி பணத்தை நீங்கள் இந்த நேரத்தில், இந்த நாளில் திருப்பிக் கொடுத்தாலும் போதும். முழு பணத்தை வட்டி பணமாக கொடுத்தால் தான், வாங்கிக் கொள்வார்கள் எனும் பட்சத்தில், ஒரு வெள்ளை கவரில் யாருக்கு வட்டி தர வேண்டுமோ, அந்த நபரின் பெயரை எழுதி வைத்து, அந்த கவருக்குள்ளே இந்த பணத்தை, மேலே சொன்ன நேரத்தில் போட்டு வைத்து விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி முதல் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு

இந்த அதி அற்புதம் வாய்ந்த இரண்டு நாளை யாரும் தவற விடாதீங்க. உங்கள் வாழ்க்கையை கருப்பாக மாற்றி வைத்திருக்கும் வட்டிப் பிரச்சனையை தீர்த்து வைக்க போகும் கரிநாள், கஷ்டங்களை களைய போகும் நாள் என்ற தகவலை முன்வைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்