- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கமும் வெள்ளியும் தாராளமாக சேர பரிகாரம்

தங்கமும் வெள்ளியும் தாராளமாக சேர பரிகாரம்

- Advertisement -

தங்கமும் வெள்ளியும் நம்முடைய வீட்டில் தாராளமாக சேர வேண்டும் என்றால், அந்த குரு பகவானின் அனுகிரகம் நமக்குத் தேவை. வியாழன் என்றாலே அது குருவை குறிக்கக்கூடிய நாள் தான். இந்த கிழமையில் பின் சொல்லக்கூடிய எளிமையான பரிகாரத்தை செய்தால், உங்களுடைய வீட்டில் தங்கமும் வெள்ளியும் தாராளமாக சேர தொடங்கிவிடும். அதுமட்டும் இல்லாமல் அடமானத்தில் இருக்கும் தங்க நகையையும் சீக்கிரம் மீட்டு எடுப்பதற்கு உண்டான பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.

தங்கம் சேர வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு சுத்தமான குண்டு மஞ்சள் தேவை. மஞ்சள் கிழங்கில் கொஞ்சமாக பன்னீர் விட்டு இழைத்து அந்த மஞ்சளை எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் ரொம்ப ரொம்ப நல்லது. மஞ்சள் கிழங்கு இல்லை என்பவர்கள் மட்டும், மஞ்சள் தூளில் கொஞ்சமாக பன்னீர் அல்லது தண்ணீர் விட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை சின்ன உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய இடதுகை குரு மேட்டுப்பகுதியில், இந்த மஞ்சளை மருதாணி வைப்பது போல ஒரு புள்ளியாக வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடங்கள் இந்த மஞ்சள் கையில் இருக்கட்டும். கையில் மஞ்சள் இருக்கும் போது குரு பகவானை மனதார பிரார்த்தனை செய்து, எங்களுடைய வீட்டில் தங்கம் மேலும் மேலும் சேர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய தங்க நகை அடமானத்தில் இருந்தால் அந்த நகைச்சீட்டை கொண்டு வந்து உங்கள் கையில் வைத்துக்கொண்டு, அந்த நகையை சீக்கிரம் மீட்டெடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கவும். 10 நிமிடங்கள் இந்த மஞ்சள் உங்கள் குரு மேட்டுப்பகுதியில் இருந்தால் போதும். பிறகு வாஷ்பேஷனில் கையை கழுவிக்கொள்ளவும்.

- Advertisement -

குறிப்பாக இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை குரு ஹோரை நேரத்தில் செய்ய வேண்டும். வியாழக்கிழமை காலை 6 – 7, மதியம் 1 – 2, இரவு 8 – 9 குரு ஹோரை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்பவர்கள், வியாழன் காலை 6:00 மணியிலிருந்து இரவு 9:00 மணிக்குள் எந்த நேரம் உங்களுக்கு சௌகரியமாக இருக்குமோ அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை விலக வாராஹி வழிபாடு

இடது கைக்கு ஆள்காட்டி விரலுக்கு கீழே இருக்கும் பகுதி தான் குரு மேடு. தொடர்ந்து வரக்கூடிய வியாழக்கிழமைகளில் இடதுகை குரு மேட்டில் மஞ்சள் வைத்து குரு பகவானை நினைக்க, குரு உங்களுக்கு வசியமாவார் என்பது இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

சற்று முன்