கட்டாயம் நம் தொழில் செய்யக்கூடிய இடத்தில் ஒரு மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். நீங்கள் சின்னதாக கடை வைத்திருந்தாலும் சரி, பெரிய தொழிற்சாலை வைத்திருந்தாலும் சரி, தள்ளுவண்டி கடை வைத்திருந்தாலும், பணம் போடும் இடத்தில் சின்ன மகாலட்சுமியின் போட்டோவாவது கட்டாயம் வைத்திருப்பீர்கள்.
அந்த மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக தினமும் இந்த 3 பொருட்களை புதுசாக கொண்டு வந்து வையுங்கள். உங்களுடைய தொழில் ஓஹோ என நடக்கும். கஜலட்சுமி யோகம் கிடைக்கும். பெரிய அளவில் லாபத்தை பார்க்க தொடங்கி விடுவீர்கள். சின்ன தொழிலை கூட கொஞ்ச நாளில் பெருசாக விரிவுபடுத்தக்கூடிய யோகம் உங்களுக்கு கிடைக்கும். அந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோமா.
கஜலட்சுமி யோகம் பெற பரிகாரம்
தினமும் கடையை திறக்க செல்லும்போது, 2 வெற்றிலை, 2 கல்கண்டு, 2 சிவப்பு செம்பருத்தி பூ கொண்டு போய் மகாலட்சுமியின் பாதத்தில் வையுங்கள். அந்த வெற்றிலைக்கு மேலேயே இரண்டு கற்கண்டு, இரண்டு செம்பருத்திப் பூவை வைத்து மகாலட்சுமியை வணங்கிவிட்டு இன்றைக்கான வருமானம் ஓஹோ என உயர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய இடது உள்ளங்கைகளில் மகாலட்சுமியை நினைத்து பச்சை நிற பேனாவில் இந்த நம்பரை எழுதுங்கள்.
‘நாணயம் 765397’ நாணயம் என்ற வார்த்தையை எழுதி அதன் பிறகு பின்னால் இருக்கக்கூடிய எங்களையும் உங்களுடைய கைகளில் எழுதிக் கொள்ளவும். எழுதிய பிறகு வேலை செய்யும்போது இது வியர்களில் கலைந்து போனாலும் தவறு ஒன்றும் கிடையாது. தினமும் காலையில் வந்து மகாலட்சுமி பாதத்தில் மேலே சொன்ன மூன்று பொருட்களையும் வைத்து, மகாலட்சுமியை பிரார்த்தனை செய்து, இடது உள்ளங்கைகளில் இதை எழுதி, உங்களுடைய வியாபாரத்தை தொடங்கி பாருங்கள், அல்லது உங்களுடைய தொழிலை தொடங்கி பாருங்கள். நிச்சயம் நீங்கள் கஜலட்சுமி யோகத்தை அடைந்து விடுவீர்கள்.
இதோடு சேர்த்து தொழில் செய்யும்போது, அடுத்தவர்களிடம் பணம் வாங்கி கல்லா பட்டியில் போடும்போது, பணத்தை எண்ணும்போது, மகாலட்சுமியின் பீஜ மந்திரமான ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது உங்களுக்கு பரிபூரண லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். உங்களைக் கடன் நெருங்காது. நீங்கள் தொழிலில் மேலும் மேலும் உயர எல்லா நல்லதையும் கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடும்.
இதையும் படிக்கலாமே: ஆடி வெள்ளி ஆடி சஷ்டி வழிபாடு
உங்களை சுற்றி ஒரு பாசிட்டிவ் ஆரா இருந்து கொண்டே இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சோம்பேறி தனமே இருக்காது. நாளைக்கு முடிக்க வேண்டிய வேலையை கூட இன்றே சேர்த்து முடித்து வைத்துவிட்டு, நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வீர்கள். முயற்சி செய்து பாருங்கள். கஷ்டப்படுபவர்களுக்காக எளிமையாக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.