- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி நீக்கும் முருகன் தீர்த்தம்

கண் திருஷ்டி நீக்கும் முருகன் தீர்த்தம்

- Advertisement -

29-07-2024 இன்று மதியம் 2:41 மணிக்கு கிருத்திகை பிறக்கிறது. 30-07-2024 நாளை மதியம் 1:40 வரை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் முருகனை நினைத்து நம்முடைய வீட்டில் ஒரு தீர்த்தத்தை தயார் செய்து வைக்கப் போகின்றோம். இந்த தீர்த்தம் உங்கள் குடும்ப கஷ்டத்தை தீர்க்கும். உங்கள் மீது பட்டிருக்கும் கண் திருஷ்டியை நீக்கி விடும்.

உங்கள் முன்னேற்றத்தை பார்த்து, எதிரிகளால் மீண்டும் மீண்டும் கண் திருஷ்டி விழாமல் இருக்கவும் இந்த பரிகாரம் கைகொடுக்கும். அது மட்டுமில்லாமல் உங்களுடைய வீட்டில் தங்கி இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்கவும் முருகன் அருளால் ஒரு நல்ல வழி பிறக்கும். எதிர்மறை ஆற்றலில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க ஆடிகிருதிகையில் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கண்திருஷ்டி நீக்கும் முருகன் தீர்த்தம்

இன்று திங்கட்கிழமை ஆடி கிருத்திகையானது 2:41 மணி அளவில் பிறக்கவிருக்கிறது. இன்று மதியம் 2 மணிக்கு மேல், இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யுங்கள். ஒரு சுத்தமான சொம்பு எடுத்துக்கோங்க. அது நிரம்ப தண்ணீர் இருக்கட்டும் அதில் 2 ஸ்பூன் கல் உப்பு, 2 சிட்டிகை மஞ்சள் பொடி, 1 சிட்டிகை அத்தர் போட வேண்டும். இது வாசனை திரவியமாகவும் இருக்கும், பொடியாகவும் கிடைக்கும்.

உங்க வீட்டு பக்கத்தில் கடையில், எந்த பொருள் கிடைக்கிறதோ அதை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்திக்கோங்க. அத்தர் ரொம்ப ரொம்ப முக்கியமான பொருள். மூன்று பொருள் உப்பு, மஞ்சள், அக்தர் அந்த தண்ணீரில் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இந்த தண்ணீரின் முன்பாக அமர்ந்து ‘முருகா முருகா முருகா’ என்ற நாமத்தைச் சொல்லி உங்கள் குடும்பம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

முருகன் என்ற வார்த்தையில் கோடி தீர்த்தத்தின் புண்ணியம் இருக்கிறது. இந்த சொம்பு தண்ணீரை ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள். அவ்வளவுதான் நாளை கிருத்திகை நட்சத்திரம் முடியக்கூடிய நேரம் இருக்கிறது அல்லவா. அதாவது செவ்வாய்க்கிழமை மதியம் 1:40 மணி வரைக்கும் கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. நீங்கள் செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு இந்த தீர்த்தத்தை எடுத்து வீட்டின் மூளை முடுக்குகளில் தெளிக்கவும்.

இந்த தீர்த்தத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவருடைய தலையின் மீதும் தெளித்து, இந்த தீர்த்தத்தை தொட்டு முகத்தை துடைக்கலாம். அல்லது முகம் கழுவிக் கொள்ளலாம். மீதம் இருக்கும் தீர்த்தத்தை உங்களுடைய வீட்டில் சனி மூலையில் ஊற்றி விடுங்கள். வீட்டு நபர்கள் வேலைக்கு அல்லது வெளியிடங்களுக்கும் சென்று இருந்தால் நாளை இரவு வீட்டுக்கு வந்தவுடன் இந்த தீர்த்தத்தை தெளித்து விடுங்கள். ஒரு வீட்டின் வடகிழக்கு மூலை சனி மூலை ஆகும்.

- Advertisement -

முருகப்பெருமானை நினைத்து கிருத்திகை நட்சத்திரம் வந்திருக்கக்கூடிய நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களை பிடித்த, உங்கள் வீட்டை பிடித்த எதிர்மறை சக்திகள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. உங்களுடைய கஷ்டங்கள் நாளைய தினத்தோடு முடிந்துவிடும்.

நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் குடும்பத்திற்கு தீங்கு வரக்கூடாது என்று நினைத்தால் முருகப்பெருமானை நினைத்து எளிமையான இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பாருங்கள். குடும்பத்தில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர முருகப்பெருமான் வழிபாடு

சூரனை வதம் செய்ய அவதாரம் எடுத்த முருக பெருமான், நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத வறுமை, கண் திருஷ்டி, கெட்ட சக்தி, பொறாமை குணம், இப்படிப்பட்ட சூரனை வதம் செய்வதற்காகத்தான் இந்த ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்