- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர முருகப்பெருமான் வழிபாடு

கடன் தீர முருகப்பெருமான் வழிபாடு

- Advertisement -

நாளை செவ்வாய்க்கிழமை. இன்றைய தினம் பிறக்கவிருக்கும் கிருத்திகை நட்சத்திரமானது நாளை மதியம் வரை இருக்கிறது. 29-07-2024 மதியம் 2:41 மணிக்கு கிருத்திகை பிறக்கிறது. 30-07-2024 மதியம் 1:40 வரை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. முருகனுக்கு மிக மிக உகந்த கிருத்திகை நட்சத்திரமானது செவ்வாய்க்கிழமையோடு இருப்பது மிக மிக சிறப்பு.

விரதம் இருப்பவர்கள், முருகனை வழிபாட்டை மேற்கொள்பவர்கள், எல்லாம் திங்கட்கிழமையான இன்று உங்களுடைய வழிபாட்டை செய்திருந்தாலும் தவறு கிடைக்காது. நாளைய தினம் விரதம் இருப்பதும் எந்த தவறும் கிடையாது. நாளைய தினமும் மதியம் வரை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. நாளை முருகன் கோவிலுக்கு சென்று பின் சொல்ல கூடிய இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய கடன் நிச்சயம் தீரும்.

- Advertisement -

கடன் தீர்க்கும் முருகன் வழிபாடு

நாளை நீங்கள் முருகனை கும்பிட்டால் வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட கடனும் தீரும். கர்மவினைகள் சம்பந்தப்பட்ட கடனும் தீரும். அதற்கு உண்டான வழியை முருகப்பெருமான் நிச்சயம் காட்டிக் கொடுப்பான். நாளை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையானது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை இருக்கிறது.

குறிப்பிட்ட இந்த நேரத்தில் ஆடி கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரை நேரத்தில் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு முருகனுக்கு செவ்வரளி பூக்களை அர்ச்சனை செய்ய வாங்கி கொடுத்து, முருகனை ஆறு முறை சுற்றிவர வேண்டும். ‘ஓம் சரவணபவ’ என்ற இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரே ஒரு சுக்கு மட்டும் எடுத்துச் செல்லுங்கள். முருகனுக்கு உகந்த பொருளாக சுக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய கடன் பிரச்சனைகள் எல்லாம் சுக்குநூறாக உடைய வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து இந்த சுக்கை கையில் வைத்துக்கொண்டு முருகனை ஆறு முறை வலம் வந்து, முருகப்பெருமானின் சன்னிதானத்தில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

வீட்டிற்கு வந்து ஒரு வெள்ளை காகிதத்தில் ‘ஓம் சரவணபவ’ என்ற நாமத்தை எழுதி முருகரை மனதார நினைத்து உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று எழுதி, கையில் இருக்கும் சுக்கை அந்த பேப்பரில் வைத்து மடித்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அல்லது பூஜையறையில் இந்த சுக்கை வைக்கலாம். கூடிய சீக்கிரத்தில் உங்களது கடன் பிரச்சனையை அந்த முருகப்பெருமான் தீர்த்து வைப்பான். கடன் சுமையை தீர்ந்த பிறகு இந்த சுக்கை எடுத்து சின்ன சின்னதாக உடைத்து இடித்து மரம் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடவும்.

- Advertisement -

நாளை செவ்வாய்க்கிழமை கடனை அடைப்பதற்கு உகந்த நாள் என்பது ஜோதிடர்களின் கருத்து. செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய நாள், அதே செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து கிருத்திகை நட்சத்திரம் வந்திருக்கிறது, இவ்வளவு அற்புதம் வாய்ந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய தவற விடக்கூடாது. நாளை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், செய்ய தவற விட்டவர்கள், நாளை மதியம் 12 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆடி செவ்வாய் துர்க்கை வழிபாடு

உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்றால் மேல் சொன்ன முறைப்படி முருகனை வழிபாடு செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நிச்சயம் முழு பலனை கொடுக்கும். அடுத்த கிருத்திகை நட்சத்திரம் வருவதற்குள் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்படும். முருகா முருகா என்ற நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால், மனதிற்குள் இருக்கும் அழுக்கு கெட்ட எண்ணங்கள் எல்லாம் வெளியே சென்று, நல்ல எண்ணங்கள் தோன்றி, மனது தூய்மையாகி, உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தானாகவே விலகி செல்லும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்