- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமண தடை விலக ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு

திருமண தடை விலக ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே அது துர்க்கை அம்பாளுக்கு உகந்த தினம். அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை என்றால் ரொம்ப ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் துர்க்கை அம்மன் வழிபாடு செய்தால் ரொம்பவும் நல்லது. இந்த நாளில் வைக்கக்கூடிய வேண்டுதல் நிச்சயம் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்க, திருமணம் ஆகாத ஆண்களுக்கு திருமணம் நடக்கவும், குடும்பம் சுபிட்சம் பெறவும் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஆடி செவ்வாய் துர்க்கை அம்மன் வழிபாடு

அம்பாளுக்கு மிக மிக உகந்தது செவ்வரளி பூ. சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய செவ்வரளி பூ துர்க்கை அம்மனுக்கு ப்ரீத்தி. அந்த பூவை வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு விரலி மஞ்சள், வேப்ப இலை இந்த மூன்று பொருட்கள் நமக்கு மாலை கட்ட தேவை. விரலி மஞ்சள் 5 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எல்லாம் மஞ்சள் நிற நூலில் மாற்றி மாற்றி வைத்து மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். செவ்வரளி பூ, வேப்ப இலை, விரலி மஞ்சள். இந்த மூன்றும் சேர்ந்த மாலையை தொடுத்து உங்கள் கையாலேயே கட்டி உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு போட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த மாலையை துர்க்கை அம்மனுக்கு போட்டு வேண்டுதல் வையுங்கள். உங்களுடைய பெயரைச் சொல்லி சின்னதாக துர்க்கை அம்பாளுக்கு குங்குமம் அர்ச்சனை செய்து, நீங்கள் வீட்டிற்கு பயன்படுத்த சிறிதளவு குங்குமத்தை மட்டும் மீண்டும் பெற்றுக் கொள்ளவும்.

- Advertisement -

வீட்டிற்கு வந்து இந்த அர்ச்சனை குங்குமத்தை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து தினமும் திருமணம் ஆகாத, ஆண்கள் பெண்கள் நெற்றியில் இட்டு வந்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ஜாதக கட்டத்தில் ஏதாவது பெரிய தோஷங்கள் இருந்தால் கூட அந்த தோஷத்தை நீக்க கூடிய வேலையை அந்த துர்க்கை அம்பாள் பார்த்துக் கொள்வாள்.  திருமணம் ஆகாத பெண்கள் உங்கள் கையாலேயே மாலையை தொடுத்து துர்கைக்கு போடுங்கள். திருமணம் ஆகாத ஆண்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த மாலை தொடுப்பதில் சிரமம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குருபூஜை செய்யும் முறை

அந்த மகனின் தாய் உதவியோடு இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். திருமணம் ஆனவர்கள் இந்த மாலையை கட்டித் தொகையை அம்பாளுக்கு போட்டால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். அடுத்த ஆடிக்குள் உங்கள் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்