நாளைய தினம் ஆடி அமாவாசை. முன்னோர்கள் வழிபாடு செய்யவும், குலதெய்வ வழிபாடு செய்யவும், இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க கூடிய இந்த நாளில், நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் அப்படியே பலிக்கும். உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறைய, செல்வ வளம் அதிகரிக்க, அமாவாசை நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கடன் தீர ஆடி அமாவாசை பரிகாரம்
நாளை ஆடி அமாவாசை என்பதால் மதிய நேரத்திற்குள் முன்னோர்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்வீர்கள். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் படையல் வழிபாட்டை எல்லாம் மனநிறைவோடு முடித்து விடுங்கள். நாளைய தினம் மாலை இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்தால் போதுமானது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.
உங்கள் முன்பாக ஒரு தாம்பூல தட்டிலோ அல்லது ஜாடியில் கல் உப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மன நிறைவோடு குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு, இரண்டு உள்ளம் கைகளிலும் கல் உப்பை அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும். கல் உப்பை இறுக்கமாக இரண்டு கைகளிலும் வைத்து மூடி கொள்ளுங்கள்.
கண்களை மூடி இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு தொடைக்கு மேல் வைத்துக்கொண்டு, உங்களுடைய கடன் சுமையெல்லாம் தண்ணீரில் கரைக்கும் உப்பு போல கரைந்து போக வேண்டும் என்று மகாலட்சுமி தாயிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். உங்கள் பக்கத்திலேயே ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த தண்ணீரில் கையில் இருக்கும் கல்லுப்பை கரைக்க வேண்டும். இந்த கல்லுப்பு கரைவது போல என்னுடைய கடனும் கரைய வேண்டும் இறைவா என்று முழுமையான பிரார்த்தனையை வைத்து விட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். கல்லுப்பை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வேண்டினாலும் கிடைக்கும். அதுவும் அதை அமாவாசை தினத்தில் செய்வது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையில் இந்த பரிகாரத்திற்கு பலன் அதிகம்.
04-08-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 9 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவுதான். இவ்வளவு எளிமையான பரிகாரத்தை செய்தால் கோடிக்கணக்கில் இருக்கும் கடன் அடையுமா என்று கேட்டால் நிச்சயம் அடையும். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு. அதேபோல செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால் நாளைய தினம் என்ன செய்வது.
ஒரு நல்ல விஷயத்தை வசியம் செய்யக்கூடிய சக்தியானது வசம்புக்கு இருக்கிறது. நிறைய பணம் பெருக வேண்டும். வீட்டில் செல்வ கடாட்சம் வசியமாக வேண்டும் என்று ஒரே ஒரு வசம்பு துண்டை கையில் வைத்து குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து நாளைய தினம் அதை உப்பு ஜாடியில் மறைத்து வைத்து விடுங்கள். உப்பு ஜாடிக்கு அடியில் வசம்பு இருக்கட்டும்.
இதையும் படிக்கலாமே: ஆடி அமாவாசை வழிபாடு 2024
மேலே கல்லுப்பை கொட்டி வைத்து நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தலாம். உப்பு தீர தீர அந்த ஜாடியில் உப்பை சேர்த்துக் கொள்ளலாம். வருடத்திற்கு ஒருமுறை அந்த பழைய வசம்பை மாற்றினாலும் போதும். ஆடி அமாவாசை தினத்தன்று இந்த வசம்பை கல்லுப்பு ஜாடியில் வைப்பது அத்தனை சிறப்பு. கல் உப்பில் வசம்பு துண்டு இருந்தால் பண வசியம் ஏற்படும் என்பதும் நம்பிக்கை. மேலும் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த இரண்டு தாந்திரீக பரிகாரங்களையும் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பயனடையலாம்.