- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோசம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகம் பிறக்கும். சொந்த ஊரிலிருந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு நல்லதே நடக்கும். தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வீன் அலைச்சல் வேண்டாம். உங்களுடைய உடமைகளை நீங்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்றார் உறவினர்களை சந்தித்து பேசி சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். முருகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூர பயணங்களால் உடல் சோர்வு வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும். வேலையில் திறமை வெளிப்படும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நிதிநிலைமை சீராக இருக்கும். முன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். கூடுதல் நன்மைகளை பெறலாம்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் நல்ல அனுபவங்களை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். வியாபாரத்தில் சுறுசுறுப்பு வெளிப்படும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. இளைஞர்களுக்கு இன்று புது வாய்ப்புகள் கிடைக்கும். காரிய தடை விலகும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள். மனக்கவலை இருக்கும். சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்கோபம் வேண்டாம். எதிலும் அனுசரணை தேவை. வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருக்கும் வரையில் பிரச்சனைகள் இருக்காது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரிய தடை விலகும். முருகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும். பண்டிகை முடிந்து உங்களுடைய வேலையை உர்ச்சாகத்தோடு துவங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் எதிர்ப்புகள் இருக்கும். போராட்டமான சூழ்நிலை நிலவும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் வரலாம். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. முன் கோபம் வேண்டாம். நிதானமாக இருங்கள். பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கும் தென்பை கடவுள் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பான்.

சற்று முன்