- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமகாலக்ஷ்மி வசிய மை தயார் செய்யும் முறை

மகாலக்ஷ்மி வசிய மை தயார் செய்யும் முறை

- Advertisement -

நாளை ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை. கூடவே கருட பஞ்சமியும் சேர்த்து இருக்கின்றது. இந்த நாளில் மகாலட்சுமியை வசியம் செய்ய ஒரு பிரத்தியேகமான மையை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். இந்த மையை தினமும் நெற்றியில் இட்டு வர, மகாலட்சுமி வசியம் ஏற்படும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். வருமானம் பல மடங்காக பெறுகும்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பது நாளைக்கு ஒரு சிறப்பு என்றால், பஞ்சமி திதி, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. இது பல மடங்கு சிறப்பு வாய்ந்தது. யாருமே இந்த நாளை தவற விடாதிங்க. இது போல் ஒரு நாள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால் நாம் மீண்டும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

நாளை காலை அல்லது மாலை ஏதாவது ஒரு நேரத்தில் கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமிக்கு சிறப்பான பூஜை நடைபெறும். உங்களுடைய பூஜையை எப்போதும் போல நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளை மாலை 8:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள் பின் சொல்ல கூடிய முறையில் மகாலட்சுமி வசிய மை தயார் செய்யப்பட வேண்டும். இந்த நேரம் தான் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை இருக்கிறது. சுக்கிரனுக்கு உகந்த நேரம், மாலை நேரம் தான். ஆகவே மாலையில் வரும் சுக்கிர ஹோரையில் தான் இந்த திலகத்தை தயார் செய்ய வேண்டும்.

பஞ்சமி என்றால் ஐந்து. ஆகவே மகாலட்சுமி வசிய மை தயார் செய்ய ஐந்து பொருட்களை நாம் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் 5, கிராம்பு 5, பாதாம் 5, குங்குமப்பூ 5, பச்சைக் கற்பூரம் 5 சின்ன துண்டு. இந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு மண் அகல் விளக்கில் வைத்து பச்சை கற்பூரத்தை போட்டு நெருப்பு மூட்டி எல்லா பொருட்களையும் கருப்பான சாம்பலாக்கி விடுங்கள். அந்தப் பொருட்கள் எல்லாம் கருப்பாகும் வரை நன்றாக எரிய வேண்டும்.

- Advertisement -

இந்த சாம்பலில் கொஞ்சமாக நெய் விட்டு கலந்தால் மகாலட்சுமி வசிய மை தயார். இதை மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து 108 மகாலட்சுமி போற்றிகளை சொல்லி உரு ஏற்றிக் கொள்ளுங்கள். இன்றைய தினம் இந்த மையை தயார் செய்தால் இந்த மைகாகு உண்டான சக்தி அபரிவிதமாக இருக்கும். இந்த மையை லேசாக தொட்டு நெற்றியில் இட்டுக்கொண்டாலே உங்களுக்கு மகாலட்சுமி வசியம், பண வசியம், சுக்கிர வசியம், ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?தூர்வா சதுர்த்தி கணபதி விரதம் 2024

வாராக்கடன் வசூல் ஆகும். அடமானத்தில் வைத்திருக்கும் நகையை மீட்டு எடுப்பீர்கள். உங்கள் வருமானத்தில் இருந்த பற்றாக்குறை, வறுமை நீங்கும். மகாலட்சுமி வசியம் நிறைவாக கிடைக்கும். நாளைய தினம் வாய்ப்பு உள்ளவர்கள் இந்த மையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் எடுத்து நெற்றியில் ஏற்றுக்கொள்ளலாம். பண கஷ்டமே உங்களுக்கு வராது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் வழிபாட்டு முறையை நாளைய தினம் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்