- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதூர்வா சதுர்த்தி கணபதி விரதம் 2024

தூர்வா சதுர்த்தி கணபதி விரதம் 2024

- Advertisement -

இன்று வளர்பிறை சதுர்த்தி திதியானது இருக்கிறது. திதிகளில் நாலாவது திதி சதுர்த்தி திதி. சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த வளர்பிறை சத்துர்த்தி திதியோடு, சேர்ந்து இன்று தூர்வா கணபதி விரோதமும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

அதாவது விநாயகர் சதுர்த்தி திதி வருவதற்கு, முந்தைய சதுர்த்தி திதியை தூர்வா சதுர்த்தி திதி என்று சொல்லுவார்கள். இந்த நாளில் விநாயகரை பின் சொல்லக் கூடிய ஆன்மீகம் முறைப்படி, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால் உங்கள் வாழ்வில் இருக்கும் அத்தனை தடைகளும் விலகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

தூர்வா சதுர்த்தி வழிபாடு

இன்று மாலை பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை அல்லது விநாயகர் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு தாம்பூல தட்டு நிரம்ப அருகம்புல்லை பரப்பி போட்டு, அதில் விநாயகரது திருவுருவப் படத்தை வைத்து அல்லது சிலையை வைத்து அருகம்புல் அர்ச்சனை செய்ய வேண்டும். நீங்கள் அர்ச்சனை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

விநாயகர் மந்திரம்

கணபதயே நம
உமாபுத்ராய நம
அகநாசநாய நம
ஏகதந்தாய நம
இபவக்த்ராய நம
மூஷிகவாஹனாய நம
வினாயகாய நம
ஈசபுத்ராய நம
ஸர்வ ஸித்தி ப்ரதாயகாய நம
குமாரகுரவே நம

- Advertisement -

விநாயகரது 10 சக்தி வாய்ந்த நாமங்கள் இவை. இந்த மந்திரத்தை சொல்லி அருகம்புல் போட்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

உங்களுடைய கணவருக்கு வேலையில் பிரச்சனை, பிரமோஷனில் தடை இருக்கிறது என்றால் அந்த தடை விலக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம், அல்லது பிள்ளைகளுடைய நலனுக்காக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் சரி, உங்களுடைய கஷ்டங்களை போக்க, விநாயகரது மனதை குளிர்விக்க இந்த நாள் ஒரு வரப்பிரசாதம்.

இதையும் படிக்கலாமே: நாக சதுர்த்தி வழிபாடு 2024

கட்டாயம் இந்த வழிபாட்டிற்கு அருகம்புல் முக்கியம். அருகம்புல் இல்லாமல் வழிபாட்டை செய்யும் போது பலனை நம்மால் முழுமையாக பெற முடியாது. அதேபோல வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு இன்று மாலை சென்று, உங்கள் கையால் பத்து ரூபாய்க்கு அருகம்புல் வாங்கிக் கொடுப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை கட்டாயம் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யுங்கள் அந்த விநாயகரின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

சற்று முன்