வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட வேண்டும் என்றால் திருப்பதி செல்ல வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். திருப்பதிக்கு சென்று வருபவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பாக முறையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றுதான் பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிலருக்கோ திருப்பதிக்கு சென்று வந்தாலே கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் ஏற்படுவது போல் தோன்றும். அப்படிப்பட்டவர்கள் திருப்பதி செல்வதை தவிர்த்து விடுவார்கள். யாராக இருந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் இந்த ஒரு பொருளை மட்டும் தங்கள் கையோடு எடுத்துச் சென்றால் கண்டிப்பான முறையில் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். அந்த பொருளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்கள் நீங்க திருப்பதி பரிகாரம்
பணக்கார தெய்வங்களில் முதலிடம் பிடித்தவராக திகழ்பவர் பெருமாளே. அதிலும் திருப்பதியில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். திருப்பதியில் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றவர்கள் வாடிக்கையாக அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களும் கூட சிரமம் பாராமல் வருடத்திற்கு ஒருமுறையாவது அவரை சென்று தரிசித்து வரவேண்டும் என்று ஆசைப்பட்டு செல்வார்கள்.
பலருக்கும் திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தட்டிச் சென்று கொண்டே இருக்கும். யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய கஷ்டங்கள் முழுமையாக தீர வேண்டும் நல்ல நிலைக்கு அவர்கள் வரவேண்டும் என்றால் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி அவரை வழிபாடு செய்யும்பொழுது ஒரு சூட்சுமமான தாந்திரீகத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு பொருள் என்றால் அது கல்லுப்பு. நம் வீட்டில் நம் சமையலுக்கு பயன்படுத்தும் அதே கல் உப்புதான். நாம் எப்பொழுது திருப்பதிக்கு கிளம்ப போகிறோமோ அப்பொழுது வீட்டில் இருந்து புதிதாக ஒரு கல் உப்பு பாக்கெட்டை வாங்கி அதிலிருந்து ஒரு கைப்பிடி அளவு மட்டும் கல் உப்பை எடுத்து ஒரு கவரில் போட்டு நன்றாக கட்டி நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். பெருமாளை தரிசிக்க எவ்வளவு நாள் ஆனாலும் அவ்வளவு நாளும் அந்த கல்லுப்பை கையிலேயே வைத்துக்கொண்டு பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.
இப்படி தரிசனம் செய்து முடித்த பிறகு வீட்டிற்கு வந்து இந்த உப்பை அப்படியே சமையல் செய்யும் உட்புடன் கலந்து வைத்து விட வேண்டும். அதை நாம் எப்பொழுதும் போல் சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். இப்படி ஒவ்வொரு முறை நாம் திருப்பதிக்கு செல்லும் பொழுது கல்லுப்பை எடுத்துக் கொண்டு போய் திரும்பவும் எடுத்து வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கியமான காரணம் கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம். அதேபோல் வெள்ளை நிறம் என்பதால் அது சுக்கிரனுக்கும் அதே சமயம் சந்திரனுக்கும் உரிய பொருளாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் திருப்பதி என்பது சந்திர கிரகத்திற்கு உரிய கோவிலாக திகழ்வதால் அந்த இடத்திற்கு நாம் கல் உப்பை எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் திருப்பக் கொண்டு வரும்பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு அந்த கல்லுப்பின் மூலமாக ஏற்படும். எப்படி கல் உப்பு சிறிது நாட்கள் கழித்து ஒன்றும் இல்லாமல் கரைந்து போகிறதோ அதே போல் நம்முடைய கஷ்டங்களும் கரைந்து போகும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர மகாலட்சுமி வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தாந்திரீகத்தை முழு மனதோடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் திருப்பதி ஏழுமலையானின் அருளால் அவர்களுடைய கஷ்டங்கள் முற்றிலும் நீங்கி மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.