- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகருட பஞ்சமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

கருட பஞ்சமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

- Advertisement -

இன்று ஆடி மாதத்தோடு, வெள்ளிக்கிழமை அன்று வந்திருக்கும் பஞ்சமி திதி. இதோடு சேர்த்து பார்த்தால் கருட பஞ்சமி திதியும் இன்று இருக்கிறது. ஆக மொத்தத்தில் இன்றைய தினம் அதி அற்புதம் வாய்ந்த தினமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் நாம் செய்யும் இந்த எளிமையான வழிபாடு, நம்முடைய பொருளாதார பிரச்சனையை உடனடியாக தீர்க்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களை நாம் நம்பிக்கையுடன் பின்பற்றினால் நிச்சயம் வாழ்க்கையில் துன்பம் இல்லை. அதன் அடிப்படையில் கருட பஞ்சமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய அந்த எளிமையான வழிபாட்டை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கருட பஞ்சமி வழிபாடு

இன்று மாலை 6:00 மணிக்கு எளிமையாக இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்தால் போதும். எல்லோர் வீட்டிலும் பசுவின் திருவுருவப்படம், யானையுடைய திருவுருவப்படம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  அழகிற்காகவாவது இதை நீங்கள் சிலையாக உங்கள் வீட்டில் வாங்கி வைத்திருப்பீர்கள். இந்த யானை பசு இரண்டையும் எடுத்து பூஜையறையில் ஒரு மன பலகையின் மேல் வையுங்கள். திருஉருவப்படமாக இருந்தாலும் அதை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம், சிலையாக இருந்தாலும் அதை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம்.

இந்த யானை பசுவின் படத்திற்கு முன்பாக தாமரை பூ, வில்வ இலை, வாசம் நிறைந்த குங்குமம், இந்த மூன்று பொருட்களை வைக்க வேண்டும். தாமரை, வில்வம், குங்குமம், யானை, பசு, வழிபாட்டிற்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருட்கள் இந்த ஐந்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்துவிட்டு 5 நெய் தீபங்கள் ஏற்றி, அந்த வில்வ இலைகளாலும் குங்குமத்தாலும் யானைக்கும் பசுவிற்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

சின்ன அட்டையில் யானை படம், பசு படம் இருந்தாலும் போதும் அதை பூஜைக்கு பயன்படுத்தலாம். 23 முறை பின் சொல்லக் கூடிய மந்திரத்தை சொல்லி அர்ச்சனையை செய்யுங்கள். அர்ச்சனை செய்யும் போது நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

மந்திரம்

ஓம் கஜலட்சுமி ஹம் சம்
ஓம் ஸ்ரீம் காமதேனு வசம் ரட்சகம்
வம் சம் ஸ்ரீம் கமலாத்மிகாயை
வில்வ பூரனனி சீக்கிரம் வசியூம்
வூம் பட் சுவாவாஹா!

- Advertisement -

அந்த பசுவின் பொம்மைக்கு 23 முறை மந்திரத்தை சொல்ல வேண்டும். யானைக்கு 23 முறை மந்திரத்தை சொல்ல வேண்டும். வில்வம் குங்குமம் இரண்டையும் மாற்றி மாற்றி எடுத்து போட்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம். இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனையை முடித்துவிட்டு மனதார உங்கள் பொருளாதாரம் மேம்பட வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், செல்வ செழிப்பு உயர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

வழக்கம்போல பூஜைக்கு தேங்காய் உடைத்து ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாட்டை மேற்கொள்ளவும். இந்த எளிமையான வழிபாட்டை இந்த வருடம், இன்றைய தினம் நீங்கள் செய்தால், அடுத்த ஒரு வருடத்திற்குள் உங்களுடைய பொருளாதார நிலை நிச்சயம் ஒரு படி மேலே உயரும். அதில் ஒரு துளி கூட சந்தேகமில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரமும் பரிகாரமும் நாங்கள் சொல்லவில்லை.

இதையும் படிக்கலாமே: வாராகி அன்னையின் அருளை பெற மந்திரம்

ஸ்ரீ சஞ்சீவி ராஜசுவாமிகள் அவர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே கொடுக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைகள் தான் இது. இந்த பூஜையை பல பேர் செய்து பலன் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய கருட பஞ்சமி தினத்தன்று இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்