- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாராகி அன்னையின் அருளை பெற மந்திரம்

வாராகி அன்னையின் அருளை பெற மந்திரம்

- Advertisement -

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னையை வழிபட உகந்த நாளான தினம் தான் பஞ்சமி. அன்றைய நாளில் அன்னையை வழிபடும் பொழுது அவருடைய அருளை பரிபூரணமாக பெற முடியும். இந்த அன்னையை மனதார நினைத்து ஒரு நிமிடம் வேண்டினாலும் போதும் நம்முடைய குறைகளை உடனே நிவர்த்தி செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால் தான் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாராகி அன்னை வழிபாட்டை மேற் கொண்டு வருகின்றனர்.

அத்தகைய அன்னையை வழிபட உகந்த நாளான பஞ்சமி திதி இன்று அதிலும் இன்றைய தினம் நாகப்பஞ்சமி. இது இன்னும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி வெள்ளிக்கிழமை இணைந்து வருவது இந்த நாளை மேலும் வலுப்பெறுவதாக மாற்றுகிறது. அப்படியான இந்த நாளில் அன்னையை நாம் வழிபடும் பொழுது நம்முடைய துன்பங்கள் துயரங்கள் நீங்கும். அப்படி வழிபடும் பொழுது சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வாராகி அன்னையின் அருளைப் பெற மந்திரம்

பஞ்சமி நாளில் வாராகி அன்னையை மாலை சூரியன் உதயத்திற்கு பிறகு வணங்குவது தான் சிறந்தது. ஏனெனில் அன்னைக்கு இரவு வழிபாடு தான் வந்தது என்று கருதப்படுகிறது. அதே போல் இன்றைய தினத்திலும் மாலை ஏழு மணிக்கு மேல் வீட்டில் அன்னையை வழிபடுபவர்கள் அன்னைக்கு முன் பஞ்ச தீபத்தை ஏற்றி விடுங்கள். அதே போல் அன்னைக்கு உகந்த மலர்களான செம்பருத்தி, செவ்வரளி போன்றவற்றை சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அன்னையின் படமோ சிலையோ இல்லாதவர்கள் வெறும் தீபத்தை மட்டுமே அன்னையாக பாவித்து வணங்கலாம் தவறு ஒன்றும் கிடையாது. இந்த நேரத்தில் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு நல்ல மனம் கமலும் சூழ்நிலையை உருவாக்குங்கள். இது அன்னையை மேலும் மகிழ்ச்சி அடைய செய்யும். நீங்கள் ஏற்றும் தீபத்தின் முன் அமர்ந்து அன்னையை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றும் நல்லதொரு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

மந்திரம்

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம :

இந்த மந்திரத்தை நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து பார்த்தவாறு சொல்ல வேண்டும். அதுவும் மூன்று முறை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு அன்னைக்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஆலயம் சென்று வழிபாடு செய்பவர்கள் அன்னைக்கு முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னால் போதும்.

இதையும் படிக்கலாமே:வீட்டில் அதிர்ஷ்டம் பெருக வாங்க வேண்டிய பொருள்

இன்றைய தினத்தில் இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கும் தீராத பிரச்சனைகள் கடன் எதிரி தொல்லை தரித்திரம் போன்ற அனைத்தும் நீங்கி நல்ல நிலையில் வாழக் கூடிய யோகத்தை அன்னை அருள்வார் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இன்றைய தினத்தில் இந்த மந்திர வழிபாடு செய்து அன்னையின் அருளை பரிபூரமாக பெறுங்கள்.

சற்று முன்