முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்மவினையின் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கையில் நாம் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். அந்த கர்ம வினைகள் நீங்கினால் தான் நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்குவதற்கும் கர்ம வினைகளை குறைப்பதற்கும் பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஒரு பாடலை மட்டும் தினமும் கூறி வர அனைத்து விதமான கர்ம வினைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும். அந்த பாடலை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்கள் நீங்க நன்மைகள் உண்டாக கூற வேண்டிய பாடல்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பாடல்கள் என்று பல பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடலை நாம் பாடும் பொழுதும் அதற்கென்று தனியாக பலன்கள் இருக்கும். அந்த பலன்களை நம்மால் பெற முடியும். அந்த வகையில் அம்பிகையை நினைத்து அபிராமி பட்டரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு தான் அபிராமி அந்தாதி. நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் அந்த பாடலில் தீர்வு இருக்கிறது.
என்ன பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சனைக்குரிய பாடலை அம்மனை நினைத்து தினமும் பாடி வந்தால் அந்தப் பிரச்சினைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதற்கும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் துன்பங்களும் தீருவதற்கும் எந்த பாடலை பாட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
இந்த பாடலை அனைவரும் தங்களுடைய வீட்டில் பூஜை செய்யும் பொழுது பாட வேண்டும். அதைவிட மிகவும் குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த நபர்கள் கண்டிப்பான முறையில் அம்பிகையை வழிபடும் பொழுது இந்த பாடலை பாட வேண்டும். இதோடு யாருக்கெல்லாம் சந்திரதிசை நடக்கிறதோ அவர்கள் எல்லாம் இந்த பாடலை பாடுவது என்பது சிறப்பு.
மேலும் ஒரு சிலரது ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறை சந்திரன் ஆகவும் அமாவாசை சந்திரனாகவும் இருப்பார். அப்படிப்பட்டவர்களுக்கு சந்திர பகவானால் பாதிப்புகள் ஏற்படும். அந்த சூழ்நிலையில் அவர்கள் இந்த பாடலை தினமும் பாடிவர நன்மைகள் உண்டாகும். இந்த பாடலை வீட்டு பூஜை அறையில் பாடுவதோடு மட்டுமல்லாமல் அம்மனின் ஆலயத்திற்கு சென்று அம்மனின் சன்னிதானத்திற்கு முன்பாக அம்மனை பார்த்தவாறு பாடும்போது அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இந்த பாடலை பூஜை அறையில் தான் பாட வேண்டும் என்று இல்லை. நாம் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கூட நம்முடைய மனதில் நாம் உச்சரித்துக் கொண்டே இருந்தோம் என்றால் நமக்கு வரக்கூடிய துன்பங்களும் வராமல் சென்று விடும் என்று கூறப்படுகிறது.
அபிராமி அந்தாதி நூல் பயன்:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
விளக்கம்:
அன்னையவளை எங்கள் அபிராமி வல்லியை அகிலஉலகும்
அரும்பியவளை மாதுளச் செந்நிறத்தவளை புவிமுழுதும்
அடக்குபவளை அங்குச பாசம் கரும்பு வில்லும் திருக்கரத்தில்
அணிந்தவளை வழிபட அடியார்க்கொரு தீங்கில்லையே
அனுதினமவளை தொழுவோம் தொழுதே எழுவோம்
இதையும் படிக்கலாமே :வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலக
மிகவும் எளிமையான இந்த நான்கு வரி பாடலை முழு மனதோடு யார் ஒருவர் அம்மனை நினைத்து தினமும் பாராயணம் செய்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்குவதோடு இனிமேல் வரக்கூடிய கஷ்டங்களும் வராமல் தடுக்கப்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.