- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமணம் நடக்க நாளைய தினம் முருகன் வழிபாடு

திருமணம் நடக்க நாளைய தினம் முருகன் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை வர இருக்கிறது. இந்த செவ்வாய்க்கிழமை முழுக்க முழுக்க இல்லத்தரசிகளுக்கு சொந்தமானது. பெண்களுக்கு சொந்தமான செவ்வாய்க்கிழமை. உங்களுடைய கணவரோடு நீங்கள் ஆயுள் முழுவதும் சந்தோஷமாக வாழ வேண்டும், தீர்க்க சுமங்கலி வரத்தை பெற வேண்டும் என்றால் நாளைய தினம் நீங்கள் கட்டாயம் முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் நிறைய வீட்டில் பெண்களுக்கு கணவர் சரியாக அமைந்திருக்க மாட்டார். தவறான பாதையில் செல்லும் கணவரை திருத்த வேண்டும் என்றாலும் நாளைய தினம் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைக்கலாம். திருமணம் ஆகாமல் இருக்கக்கூடிய பெண்களும் நாளைய தினம் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்தால் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

- Advertisement -

சீக்கிரம் திருமணம் நடக்கும். இந்த வழிபாட்டை எல்லாம் நாளை நீங்கள் எந்த கோவிலில் செய்ய வேண்டும், தெரியுமா வள்ளி தெய்வானையோடு இருக்கக்கூடிய முருகன் சன்னதியில் செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு

சரி இந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்வது? நாளை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த வழிபாட்டை முருகன் கோவிலுக்கு சென்று செய்யலாம். இல்லையென்றால் மாலை 6:30 மணிக்கு மேல் இரவு 8:00 மணிக்குள் இந்த வழிபாட்டை முருகன் கோவிலுக்கு சென்று செய்யலாம். வீட்டு பக்கத்தில் இருக்கும் வள்ளி தெய்வானை யோடு சேர்ந்து இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

முருகனுக்கு 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். உங்கள் கைகளால் முருகனுக்கும் மரிக்கொழுந்தை மாலையாக கட்டி போடவும். மரிக்கொழுந்தோடு மல்லிப்பூ கிடைத்தால் இரண்டையும் சேர்த்து மாலையாக தொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த மாலையை முருகப்பெருமானுக்கு போட்டுவிட்டு முருகனை மனதார பிரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து கொள்ளவும்.

பிறகு முருகன் சன்னிதானத்தை 6 முறை வலம் வரவும். சிறிது நேரம் முருகன் கோவிலில் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை முருகப்பெருமானிடம் சொல்லுங்கள். திருமணம் நடக்க வேண்டும் என்றால் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று கேளுங்கள். திருமணம் ஆகி உங்கள் கணவர் உங்களோடு சரியாக குடும்பம் நடத்தவில்லை என்றால், கணவரை திருத்த, என்ன வேண்டுதல் வைக்க வேண்டுமோ அதை முருகப்பெருமானிடம் கேளுங்கள் நாளைய தினம் முருகன் கோவிலுக்கு சென்று பெண்கள் மேல் சொன்ன முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வசந்தகாலம் வீசத் தொடங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: ஆகஸ்ட் மாதம் திரி புஷ்கரண யோகம் மற்றும் ரவி புஷ்கர்ண யோகம் ஏற்படும் தினங்கள்

அதில் ஒரு துளியும் சந்தேகம் கிடையாது. நாளை தினம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையை யாரும் தவற விடாதிங்க. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்