- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆகஸ்ட் மாதம் திரி புஷ்கரண யோகம் மற்றும் ரவி புஷ்கர்ண யோகம் ஏற்படும் தினங்கள்

ஆகஸ்ட் மாதம் திரி புஷ்கரண யோகம் மற்றும் ரவி புஷ்கர்ண யோகம் ஏற்படும் தினங்கள்

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பொருளின் மீது ஆசை வைத்திருப்போம். ஆசை இல்லாத நபர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. அப்படி ஆசைப்பட்ட பொருளை வாங்க வேண்டும் என்பதற்காக நீண்ட நாட்களாக சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைப்பவர்கள் பலர் இருப்பார்கள். அப்படி பணத்தை சேர்த்து வைத்து விரும்பிய பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் எந்த தினங்களில் வாங்கினால் அந்த பொருள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திரி புஷ்கரண யோகம் மற்றும் ரவி புஷ்கர்ண யோகம்

ஒவ்வொரு மாதத்திலும் திரி புஷ்கர்ண யோகம் ரவி புஷ்கர யோகம் என்பது ஏற்படும். ரவி புஷ்கர யோகம் என்பது ஞாயிற்றுக்கிழமையில் மட்டும்தான் ஏற்படும். திரி புஷ்கர யோகம் என்பது ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மீதம் இருக்கும் எந்த கிழமையில் வேண்டுமானாலும் ஏற்படும். இந்த யோகம் இருக்கக்கூடிய நேரத்தில் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அது மூன்று மடங்கு நமக்கு அதிகமாக கிடைக்கும். அதாவது திரும்ப திரும்ப வாங்கும் சூழ்நிலை உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இது பொருட்களை வாங்குவதற்காக மட்டுமல்ல குலதெய்வ வழிபாடு செய்யும்பொழுது குலதெய்வத்தின் அருளை பெறுவோம். அப்படி அந்த நேரத்தில் குலதெய்வ அருளை பெற்றோம் என்றால் நாம் திரும்பவும் தெய்வத்தின் அருளை அதிக அளவில் பெறுவோம் என்று கூறப்படுகிறது. இந்த தினங்களில் மங்களப் பொருட்களை வாங்குவது, விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது, தெய்வங்களை வழிபடுவது, தெய்வங்களுக்குரிய வழிபாடுகளை செய்வது என்று நல்ல காரியங்களை நாம் செய்யும்பொழுது அந்த காரியங்களை நாம் மறுபடியும் திரும்பத் திரும்ப செய்வோம் என்று கூறப்படுகிறது.

இந்த தினங்களில் நாம் வாங்கக்கூடிய பொருட்கள் ஆனது நம்முடைய சேமிப்பில் இருந்து வாங்க வேண்டியதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர்த்து கடன் வாங்கி எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினோம் என்றால் கடன் வாங்குவதற்குரிய சூழ்நிலைதான் உண்டாகுமே தவிர்த்து பொருட்கள் சேர்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரவி புஷ்கர யோகம் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:02 மணியிலிருந்து மதியம் 1:26 வரை இருக்கிறது. திரிபுஷ்கர யோகம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி புதன்கிழமை விடியற்காலை 3:09 மணியிலிருந்து 6:09 மணி வரை இருக்கிறது. இதேபோல் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:45 க்கு ஆரம்பித்து 26 ஆம் தேதி திங்கட்கிழமை விடியற்காலை 3:39 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரங்களில் எந்த நேரம் உங்களுக்கு வசதியான நேரமாக இருக்கிறதோ, அந்த நேரத்தில் புதிய பொருட்களை வாங்குவது, தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:முன்னேற்ற தடையை நீக்கும் பரிகாரம்

ஆசைப்பட்டு வாங்கக்கூடிய பொருட்கள் நமக்கு பல மடங்கு உயர வேண்டும் என்று நினைத்தால் இந்த தினங்களில் வரக்கூடிய யோக நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்