- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமிருதுவான பாதங்களை பெற

மிருதுவான பாதங்களை பெற

- Advertisement -

நம் உடல் எடையை முழுமையாக தாங்க கூடிய ஒரு உறுப்பு என்றால் அது நம்முடைய பாதம் தான். நம்முடைய உடலை தாங்கி நிற்கிறது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பாதத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால் அந்த வெடிப்பின் காரணமாக வலிகள் உண்டாகும். இதனால் பலரும் பல விதங்களில் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்ட பாத வெடிப்பால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை தீர்ப்பதற்கும், பாத வெடிப்பை சரி செய்து மிருதுவான பாதத்தை பெறவும் செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

அதிக அளவில் உடல் எடை இருப்பவர்களுக்கு பாதத்தில் வெடிப்பு என்பது ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரமாக நின்று கொண்டே இருப்பவர்களுக்கும் பாத வெடிப்பு என்பது ஏற்படும். மேலும் அதிகப்படியாக நடந்து செல்வது போன்றவற்றினாலும் பாத வெடிப்பு என்பது ஏற்படும். முக்கியமாக நம்முடைய உடல் எடையை தாங்கக்கூடியது அந்த பாதம் என்பதால் அந்த எடைக்கு ஏற்றார் போல் அந்த பாதத்தின் மிருதுவாக இருக்கக்கூடிய தன்மை மாறி கடினத்தன்மை ஏற்படும்.

- Advertisement -

அதையும் தாண்டி நாம் ரொம்ப நேரம் நின்று கொண்டு இருக்கும் பொழுது அந்த உடல் எடையின் காரணமாக கடினமாக இருக்கக்கூடிய பாதமானது வெடிப்பு விடும். இந்த வெடிப்பை முறையாக நாம் பராமரித்து சரி செய்யாமல் இருக்கும் பொழுது அந்த வெடிப்பானது மேலும் அதிகரித்து அதனால் வலிகளும் வேதனைகளும் ஏற்படக்கூடும். இதை சரி செய்வதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலும் நீண்ட நேரம் நிற்காமல் அவப்பொழுது அமர வேண்டும் என்றாலும் நாம் நம்முடைய பாதத்தை முறையாக பராமரித்தாலே இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பாத வெடிப்பு ஏற்பட்டுவிட்டது என்னும் பட்சத்தில் நாம் அந்த பாதத்தில் இருக்கக்கூடிய கடினமான தோளையும், இறந்த செல்களையும் நீக்க வேண்டும். இதற்கு முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல்லுப்பு சிறிது ஷாம்பு போன்றவற்றை சேர்த்து நம்முடைய கால்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு பியுமிக்ஸ் கல் என்று கடைகளில் விற்கும். இந்த கல்லை வாங்கி வந்து கடினமாக இருக்கக்கூடிய தோல் பகுதியில் நன்றாக தேய்த்து அந்த இறந்த செல்களை நீக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நீக்கிய பிறகு நம்மிடம் இருக்கக்கூடிய சாதாரண தேங்காய் எண்ணெயை கூட பாதத்தில் நாம் தடவலாம். நம்முடைய சருமம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அது வறண்டு போகாமல் இருக்க வேண்டும். அந்த வறட்சியை நீக்குவதற்கு சருமமே அவ்வப்பொழுது எண்ணையை உற்பத்தி செய்யும். ஆனால் பாதத்தில் இந்த எண்ணெய் சுரப்பி என்பது இருக்காது என்பதால் நாம் தினமும் நம்முடைய பாதத்திற்கு எண்ணெய் தடவி கொள்வதன் மூலம் சருமம் வறண்டு போகாமல் ஈரத்தன்மையுடன் இருக்கும். இப்படி இருப்பதன் மூலம் பாத வெடிப்பு வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இதோடு மட்டுமல்லாமல் பலருக்கும் குளிர்காலத்தில் இந்த வெடிப்பு பிரச்சினை என்பது அதிகப்படியாக ஏற்படும். அப்பொழுது இரவு படுக்கச் செல்லும் பொழுது கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு படுத்து உறங்கினால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதிகப்படியாக பாத பிடிப்பு இருக்கிறது என்பவர்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை தக்காளி அரைத்த அந்த விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதனுடன் பாதி எலுமிச்சம்பழ சாறையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு வேசலின் இருக்கும் பட்சத்தில் அதையும் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த பேஸ்ட்டை இரவு படுக்கச் செல்லும் பொழுது பாதத்தை சுத்தம் செய்துவிட்டு தடவி வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாத வெடிப்பு படிப்படியாக நீங்கி மிருதுவான பாதத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே உச்சி முதல் பாதம் வரை நல்ல பளபளன்னு ஷைனிங்கா மாற சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும். அழகு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய தீர்வு.

இந்த எளிமையான வழிமுறைகளை முறையாக நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய பாதத்தில் இருக்கக்கூடிய சருமத்தை நம்மால் பாதுகாக்க முடியும். முகத்தில் இருக்கக்கூடிய சருமமும் பாதத்தில் இருக்கக்கூடிய சருமமும் ஒன்றுதான். முறையாக பராமரித்தோம் என்றால் முகத்தை விட பாதத்தை அழகாக பார்த்துக் கொள்ள முடியும்.

சற்று முன்