வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை. வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருகின்றது. இந்த நாளில் அனைவரும் மகாலட்சுமியின் அருள் கடாட்சியத்தை பெற வேண்டும் என்றால், செய்ய வேண்டிய எளிமையான ஒரு சூட்சம பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எதற்காக இந்த பதிவு முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளது என்றால், இந்த குளியலுக்கு தேவையான பொருளை நீங்கள் முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் வெள்ளிக்கிழமை பரிகாரத்தை செய்து பலன் அடைய முடியும். வரலட்சுமி விரதத்தன்று வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பு பெண்கள் குளித்து விட வேண்டும். உங்கள் குடும்பம் செல்வ செழிப்பில் உயர்ந்து நிற்க உங்களிடம் மகாலட்சுமி கடாட்சம் தங்க எப்படி குளிப்பது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வரலட்சுமி விரதத்தன்று செய்ய வேண்டிய பரிகாரம்.
வியாழக்கிழமையே தாமரை பூவையும் கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் வீட்டிற்கு வாங்கி வாருங்கள். வியாழக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு, ஒரு செம்பு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி, இந்த தாமரை பூக்களை ஒவ்வொரு இதழாக பறித்து அந்த தண்ணீரில் போட்டு ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தையும் அதில் போட்டு மகாலட்சுமி தாயிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும். செல்வ செழிப்பில் குடும்பம் உயர வேண்டும். பெரிய அளவில் வருமானம் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். இந்த தீர்த்தத்தை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலை வரலட்சுமி நோன்பு, ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நாள் அன்று, சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து பூஜை அறையில் தயார் செய்து வைத்திருக்கும், இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூக்களை எல்லாம் வடிகட்டி எடுத்துவிட்டு அந்த தண்ணீரை மட்டும் நீங்கள் குளிக்கின்ற நீரில் கலந்து குளித்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் பன்னீர் இருந்தால் அந்த பன்னீரையும் குளிக்கின்ற தண்ணீரோடு இந்த தீர்க்கதோடு சேர்த்து குளித்து விடுங்கள். மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக கிடைக்க இந்த ஒரு குளியலே போதும். மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய இடம் தாமரை பூ.
இந்த தாமரை இதழ்கள் ஊற வைத்த தண்ணீரை நீங்கள் குளிக்கும் போது, மகாலட்சுமியின் அருள் கடாட்சம் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். வீட்டில் இருக்கும் ஆண்கள் இதை செய்கிறார்களோ இல்லையோ, வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி, வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் வரலட்சுமி விரதத்தன்று இந்த தண்ணீரில் குளிப்பது மிக மிக சிறப்பு. மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்க இந்த பரிகாரம் ஒன்றே போதும்.
சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த குளியலை மேற்கொள்ளவும். பிறகு பூஜையறையில் வந்து மகாலட்சுமியை வணங்கி விட்டு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்குங்கள். விரதம் இருப்பவர்கள் விரதம் இருக்கலாம். கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்பவர்கள், வழிபாடு மேற்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொன்னால் நீங்களும் கோடீஸ்வரர் தான்.
வியாழக்கிழமை அனைவரும் பூக்கடைகளில் சொல்லி வைத்து தாமரை புஷ்பங்களை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளது. தாமரை பூ குளிப்பதற்கு மட்டுமல்ல. வரலட்சுமி நோன்பு அன்று மகாலட்சுமிக்கு தாமரைப் பூ வைத்து வழிபாடு செய்வதும் சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறுவோம்.