நேர்மறை எண்ணங்களால் நமக்கு நேர்மறையான செயல்கள் ஏற்படும் என்பது பலரும் அறிந்த உண்மையே. நம்முடைய ஆழ்மனதில் நாம் நினைக்கக்கூடிய எண்ணங்களுக்கு பல மடங்கு வலிமை இருக்கிறது என்பதும் பலரும் அறிந்திருப்போம். இருந்தாலும் அதை முறையாக நாம் பயன்படுத்தாமல் விடுவது தான் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு ஒரு முக்கியமான காரணமாக திகழ்கிறது.
எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் நேர்மறையாக யோசித்து செய்தோம் என்றால் அந்த செயலின் முடிவு நேர்மறையாக தான் இருக்கும். எதிர்மறையாக நினைத்தோம் என்றால் அது எதிர்மறையாக தான் சென்று முடியும். இதை பலரும் தங்களுடைய அனுபவத்தில் உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆவணி மாதம் முழுவதும் பணவரவை அதிகரிப்பதற்கு எழுத வேண்டிய ஒரு வரி பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
“நான் நன்றாக இருக்கிறேன், நான் அழகாக இருக்கிறேன், நான் அமைதியாக இருக்கிறேன், நான் நன்றாக படிக்கிறேன்” என்று நமக்கு தேவையான ஒன்று நடந்தது போல் நினைத்துக் கொண்டு ஆழ்மனதிலிருந்து நாம் கூறும் பொழுது அது அப்படியே நடந்து விடும் என்று கூறப்படுகிறது. இதை தான் லா ஆப் அட்ராக்சன் என்று கூறுகிறோம். எந்த அளவிற்கு நாம் நம்மை பற்றி உயர்வாக நினைக்கிறோமோ அந்த அளவிற்கு உயர்வு நமக்கு கிடைக்கும். அதே சமயம் தாழ்வாக நினைத்தால் இறங்கிக்கொண்டே சென்று விடுவோம். அந்த வகையில் ஆவணி மாதத்தில் நாம் எழுத வேண்டிய வார்த்தைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆவணி மாதத்தில் பணவரவு அதிகரிக்க வேண்டும், எதிர்பாராத பணவரவு ஏற்பட வேண்டும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆவணி மாதம் முழுவதும் இந்த ஒரு வரியை மட்டும் தினமும் ஒன்பது முறை எழுதினால் போதும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எழுதலாம். இதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. தினமும் தொடர்ச்சியாக எழுத வேண்டும்.
இதற்காக தனியாக ஒரு நோட்டை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வரியை நாம் பச்சை நிற பேனாவில் எழுதுவது மிகவும் சிறப்புக்குரியது. காரணம் பச்சை என்பது குபேரருக்குரிய நிறம். நாம் பணம் தொடர்பான வேண்டுதலை எழுதுகிறோம் என்பதால் பச்சை நிறம் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அடுத்ததாக நாம் எந்த நேரத்தில் நிதானமாக, பொறுமையாக எந்தவித அவசரமும் இல்லாமல் இருக்கிறோமோ அந்த நேரத்தில் எழுத வேண்டும். அது இரவு 11 மணி ஆக இருந்தாலும் அதில் எந்தவித தவறும் இல்லை.
இதற்காக நாம் பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி வைத்துவிட்டு எழுத வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து எழுதலாம். எந்த இடம் நமக்கு வசதியாக இருக்கிறதோ எந்த இடத்தில் நமக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்கிறதோ அந்த இடத்தில் எழுதினால் போதும். இந்த வரியை எழுதும் பொழுது நம்மிடம் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவு வந்து இருந்தால் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்போமோ அந்த மகிழ்ச்சியை மனதார நினைத்துக் கொண்டு எழுத வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஏனோ தானோ என்று எழுதுவதால் எந்தவித பலனும் ஏற்படாது. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இதை எழுதலாம். எழுத வேண்டிய வரி.
“இந்த ஆவணி மாதத்தில் அனுதினமும் அதிரடியான பணவரவை நான் பெறுகிறேன்”
இதையும் படிக்கலாமே பொல்லாத கண் திருஷ்டியை பொடி பொடியாக்கும் பரிகாரம்
ஒரே ஒரு வரி அதை 9 முறை மட்டும் தினமும் எழுதுவதன் மூலம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு நமக்கு ஏற்படும். நம்பிக்கையுடன் எழுதி முழு பலனையும் பெறுங்கள்.