- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் பூஜை

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் பூஜை

- Advertisement -

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியாக வாழ வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும், எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளும் கஷ்டங்களும் இருக்கத்தான் செய்கிறது. அவரவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அவர்களின் பிரச்சனைகள் மாறுமே தவிர்த்து அனைவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கும், அந்த பிரச்சினையை சமாளித்து வெளியே வருவதற்கும் தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளை பெற்று பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு செய்யக்கூடிய ஒரு பூஜை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் பூஜை

வேலை தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படலாம், பணரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம், உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம், மனம் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். இப்படி பல பிரச்சினைகளை நம்மால் அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கக் கூடிய ஒரு அற்புதமான பூஜையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பூஜையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். ஐந்து மணியில் இருந்து ஆறு மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்து விட வேண்டும். இந்த பூஜையில் நாம் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக் கூடியவள் தான் மகாலட்சுமி தாயார். நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி அதற்கு தேவையான அனைத்து விதமான ஆற்றல்களையும் தரும் வல்லமை படைத்தவராக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார்.

நல்ல சுபமுகூர்த்த நாளாக பார்த்து காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு பூஜை அறைக்கு வந்து இரண்டே இரண்டு தீபங்களை மட்டுமாவது ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாருக்கு வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபமானது எந்த தீபமாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த விளக்கில் வேண்டுமானாலும் ஏற்றலாம்.

- Advertisement -

தீபம் ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாருக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக்கொண்டு கண்களை மூடி அமர்ந்து 5 நிமிடம் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீங்கள் நினைக்க வேண்டும். பிறகு 10 நிமிடமாவது மகாலட்சுமி தாயாரை நினைத்து தியானம் செய்ய வேண்டும். இப்படி தியானம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விடுங்கள்.

பிறகு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பிரதான தெய்வத்திற்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 41 நாட்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை நினைத்து தீபமேற்றி தியானம் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே:துரோகிகளும் எதிரிகளும் விலக வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பூஜையை முழுமனதோடு வீட்டில் யாராவது ஒருவர் செய்வதன் மூலம் அவர்களுடைய குடும்பத்திற்கே நல்ல காலம் பிறந்து விடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்