ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு நிலைக்கு உயர்கிறார் என்னும் பட்சத்தில் அவருடன் அவருக்கு தெரியாமலேயே எதிரிகளும் துரோகிகளும் இருப்பார்கள். அப்படி எதிரிகள், துரோகிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களால் அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை வரும். நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தங்களால் இயன்ற அளவு பிரச்சனைகளை உருவாக்கி நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே செயலாற்றுவார்கள். அப்படிப்பட்ட எதிரிகளையும் துரோகிகளையும் நம் வாழ்வில் இருந்து நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நமக்கு எதிரிகளாக திகழக் கூடியவர்களை கூட நாம் ஓரளவிற்கு நம்பிவிடலாம். ஆனால் உடன் இருந்து நாம் கீழே விழுக வேண்டும் என்பதற்காக குழி பறிக்கும் துரோகிகளை நம்மால் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம். அதே சமயம் அவர்களால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது மிக மிக அதிகமாகவே திகழ்கிறது. இந்த துரோகிகளையும் எதிரிகளையும் உணர்ந்து அவர்கள் நம்முடைய வாழ்க்கையை விட்டு விலகிச் செல்வதற்கு பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு ஆயுதங்கள் இருக்கும். அந்த ஆயுதங்களை வைத்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்களில் இருந்து நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களிலிருந்து அந்த தெய்வம் நம்மை காப்பாற்றும் அந்த வகையில் ஒரு ஆயுதத்தை வைத்து எப்படி வீட்டிலேயே வழிபாடு செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அம்மன் மற்றும் சிவனின் கைகளில் இருக்கக்கூடியது தான் திரிசூலம். இந்த திரிசூலம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகவே திகழ்கிறது. திரிசூலத்தை வைத்து பல அசுரர்களையும் அரக்கர்களையும் வதம் செய்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட திரிசூலத்தை பலரும் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று கூறும் வழக்கம் இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவில் வாங்கி முறைப்படி நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த திரிசூலத்தால் நமக்கு நன்மைகள் மட்டுமே ஏற்படும்.
பலரும் தங்களுடைய எதிரிகள் பிரச்சினை தீர வேண்டும் என்று அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய திரிசூலத்தில் எலுமிச்சம் பழத்தை குத்தி வழிபாடு செய்து விட்டு வருவார்கள். அதைவிட பல மடங்கு பலன் தரக்கூடியதாக தான் வீட்டிலேயே செய்யக்கூடிய வழிபாட்டு முறை திகழ்கிறது இந்த வழிபாட்டிற்கு ஆறு இன்ச் அளவிற்குள் இருக்கக்கூடிய திரிசூலத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அது ஸ்டாண்ட் இருப்பது போல் பார்த்து வாங்கிக் கொள்வது என்பது சிறப்பு.
உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த திரிசூலத்தை அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதற்கு மேல் சிவப்பு நிற துணியை விரித்து அந்த துணிக்கு மேல் பச்சரிசியை கொட்டி அதற்கு மேல் இந்த திரிசூலத்தை வைக்க வேண்டும். இந்த திரிசூலத்தின் நுனியில் கண்டிப்பான முறையில் எலுமிச்சம் பழத்தை நாம் குத்தி வைத்து எலுமிச்சம் பழத்திற்கும் திரிசூலத்திற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
தினமும் வீட்டில் இருக்கக்கூடிய இந்த திரிசூலத்தை வழிபாடு செய்ய வேண்டும். குங்கும அர்ச்சனை செய்வது மஞ்சள் அர்ச்சனை செய்வது போன்ற வழிகளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அதனால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துரோகிகள் மற்றும் எதிரிகளின் தொல்லையில் இருந்து நம்மால் விடுபட முடியும்.
இதையும் படிக்கலாமே:சொந்தமாக நிலம் வாங்க நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர சிவன் வழிபாடு
மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக திகழக்கூடிய திரிசூலத்தை இந்த முறையில் நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்ய எதிரிகள் மற்றும் துரோகிகளின் தொல்லை முற்றிலும் நீங்கி நிம்மதியான முன்னேற்றகரமான வாழ்க்கையை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.