நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்ற ஒரு வார்த்தையை உபயோகப்படுத்தி இருப்போம். எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்து ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் நமக்கு வெற்றி கிடைக்காமல் போய்விடும். அப்பொழுது அதிர்ஷ்டம் கெட்டவன் என்ற ஒரு எண்ணம் நமக்கே தோன்றி ஒருவித தாழ்வு மனப்பான்மை என்பது ஏற்படும். இதே சமயம் ஒரு சிலர் சிறிதாக ஏதாவது ஒன்றை எதிர்பாராமல் செய்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு பல வகைகளில் நன்மைகள் ஏற்பட்டிருக்கும். இதை பார்க்கும்போது செம்ம அதிர்ஷ்டம் டா உனக்கு என்று கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி கூறும் பொழுது நமக்கு ஏன் இந்த அதிர்ஷ்டம் வரவில்லை என்ற வருத்தமும் நம் மனதிற்குள் ஏற்படும்.
அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியாக ஜாதகத்தில் பல கிரகங்களின் அமைப்பு சாதகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிர்ஷ்டம் என்பது ஏற்படும். ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு சாதகமாக இல்லாத பட்சத்தில் அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அப்பொழுது நம்முடைய வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்க முடியுமா? முடியாதல்லவா… அந்த அதிர்ஷ்டத்தை பெறுவதற்கும் நம்மிடம் இருக்கக்கூடிய துரதிஷ்டத்தை விரட்டி அடிப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அதிர்ஷ்டத்தை தரும் அண்ணாச்சி பூ
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது அன்னாச்சி பூ. நாம் சாதாரணமாக நினைக்கக்கூடிய பொருட்களில் பல மகத்துவம் நிறைந்திருக்கிறது. அதே சமயம் மருத்துவமும் நிறைந்திருக்கிறது. எப்படி ஏலக்காய், கிராம்பு இவை இரண்டும் மகாலட்சுமிக்கு உரிய பொருட்கள் என்று கருதுகிறோமோ? அதே போல் தான் அன்னாச்சி பூவும் மகாலட்சுமிக்குரிய பொருளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அன்னாச்சி பூவை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கு உடையாத நல்ல அன்னாச்சி பூவாக ஒரு பூவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பூவில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய நூலை நன்றாக சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். நூல் கட்டிய இந்த அன்னாச்சி பூவை ஒரு நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் படும்படி வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத் துணியில் இந்த அன்னாச்சி பூவை வைத்து மடித்து அதை நம்முடைய பணம் வைக்கும் பரிசில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி நாம் வைத்துக் கொள்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய துரதிஷ்டத்தை விளக்கி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் ஏற்படுவதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். பணம் இருந்தால் நம்மால் அனைத்தையுமே செய்து முடித்து விட முடியும் அல்லவா? அதனால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்துமே படிப்படியாக விலகி விடும்.
இதையும் படிக்கலாமே:குழந்தை பாக்கியம் பெற கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
பிரியாணியில் போடக்கூடிய இந்த அன்னாச்சி பூவை நாம் சிறிதும் மதிக்காமல் தூக்கி எறிவோம். அப்படிப்பட்ட அன்னாச்சி பூவை இந்த முறையில் நாம் வைத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.