- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோகுல அஷ்டமி வழிபாட்டில் வைக்க வேண்டிய முக்கியமான பொருள்

கோகுல அஷ்டமி வழிபாட்டில் வைக்க வேண்டிய முக்கியமான பொருள்

- Advertisement -

கோகுல அஷ்டமி வழிபாட்டில் ஒரு புது தகவலை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாத அஷ்டமி திதி. இதைத்தான் கோகுலாஷ்டமி என்று சொல்லுவார்கள். இன்று மாலை 6:30 மணிக்கு மேல் எல்லோர் வீட்டிலும் கிருஷ்ணனுக்கு சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வோம் அல்லவா.

அந்த பூஜையில் மிக மிக முக்கியமாக வைக்க வேண்டிய ஒரு பொருளை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது எந்த பொருள், அந்த பொருளை பூஜை அறையில் எப்படி வைக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கோகுல அஷ்டமி வழிபாடு

சமையலறையில் இருந்து எடுத்து வந்து பூஜை அறையில் வைக்க வேண்டிய ஒரு பொருள் என்ன தெரியுமா. மத்து, மோர் கடையும் மத்து. மோரை கடைந்து வெண்ணெய் எடுத்து உருளியில் வைக்கும் போது, கிருஷ்ணன் அந்த உறுலியிலிருந்து வெண்ணையை திருடி சாப்பிடுவார். கோபியர்கள் குட்டி கிருஷ்ணன் செய்த குறும்பை பார்த்துவிட்டு, விரட்டி அடிக்கும் போது அந்த மத்தை எடுத்துக் கொண்டு கிருஷ்ண பரமாத்மா ஓடி விடுவாராம்.

இன்று பூஜை அறையில் கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யும் போது, ஒரு சின்ன தட்டில் மோர் கடையும் மத்தில் அடிப்பக்கத்தில் கொஞ்சமாக வெண்ணெயை பூஜை அறையில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டுக்கும் கிருஷ்ண பரமாத்மா ஓடி வந்து, அந்த மத்தை எடுத்து அதற்கு அடியில் இருக்கும் வெண்ணெயை தடவி சாப்பிட்டுக் கொள்வார்.

- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில் ஏதாவது தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால், அந்த பிரச்சனையை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அந்த மத்துக்கு அடியில் இந்த காகிதத்தையும் வைக்கலாம். கிருஷ்ண பரமாத்மா மத்தை எடுக்கும்போது உங்களுடைய கோரிக்கைகளையும் படித்து, வேண்டுதலை நிறைவேற்றி வைத்து விடுவார் என்பது ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இது முதல் பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குள் நீங்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

அடுத்ததாக கிருஷ்ண பரமாத்மாக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இடம் என்றால், அது மாட்டு தொழுவம்தான். பசு மாடுகளை கட்டி வைத்திருக்கும் மாட்டு தொழுவத்தில் கிருஷ்ண பரமாத்மா அதிக நேரத்தை செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாட்டு தொழுவத்திலிருந்து ஒரு கைப்பிடி மண் கிடைத்தால், ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்பவர்கள், பஞ்சகவ்ய விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பஞ்சகாவியம் விளக்கு முழுக்க முழுக்க பசிவிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் செய்த விளக்கு. இந்த விளக்கை கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின் போது ஏற்றினால், பரமாத்மா மனம் குளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பணம் சேர நாணயம் பரிகாரம்

பஞ்சகவ்ய விளக்கு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளிலும் தற்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை ஆன்மீகம் நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்