செல்வ வளம் அதிகரிப்பதற்கு பல வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைப்போம். அப்படி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதித்தாலும் அந்த பண நம்மிடம் தங்க வேண்டும் என்றால் அதுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு மந்திர வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவை தரும் மகாலட்சுமியின் மூல மந்திரம்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எந்த வீட்டில் மகாலட்சுமி மகிழ்ச்சிகரமாக இருக்கிறாளோ அந்த வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தாயாரை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வதற்கு என்று பல வழிமுறைகளும் வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் சில காரியங்களை நாம் செய்யும்பொழுது அந்த காரியத்தால் மகாலட்சுமி தாயார் மனமுகர்ந்து நமக்கு அருளாசி புரிவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த மந்திரத்தை நாம் கூறினால் மகாலட்சுமி தாயார் மகிழ்ச்சி அடைவார் என்று தான் பார்க்கப் போகிறோம்.
மகாலட்சுமி தாயாருக்கு உகந்த தினமாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை என்றாலும் தினமும் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி தினமும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது பெருமாளையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளை வழிபாடு செய்யாமல் மகாலட்சுமி தாயாரை மட்டும் வழிபாடு செய்தால் அதில் எந்த பலனும் இருக்காது.
அதேபோல் மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களை வாங்கி வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயார் மனம் குளிர்வாள் என்று கூறப்படுகிறது. வாசனை மிகுந்த பொருட்கள் என்று பல இருக்கின்றன. அவற்றை மகாலட்சுமி தாயாருக்கு வைத்து நாம் வழிபாடு செய்தால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எப்பொழுதும் முக மலர்ச்சியுடன் சண்டைகள் போடாமல் சிரித்த முகத்துடன் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் கண்டிப்பாக முறையில் மகாலட்சுமியின் அருள் என்பது இருக்கும்.
மேலும் தினமும் நாம் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது இந்த ஒரு மந்திரத்தை மட்டும் எட்டு முறை கூறினால் போதும். 8 என்பதற்கு காரணம் அஷ்டலட்சுமிகள் ஒவ்வொருவருக்கும் இந்த மந்திரத்தை கூறுவதாக பொருள்படும். இயன்றவர்கள் தினமும் 108 முறை கூறலாம். அப்படி தினமும் கூற இயலாது என்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலட்சுமியே நம
இதையும் படிக்கலாமே: கோடிகளை குவித்து கடன்களை காணாமல் போகச் செய்யும் தீபம்
இந்த மந்திரத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரையும் மகாவிஷ்ணுவையும் நினைத்து யார் ஒருவர் தினமும் கூறி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு செல்வ வளம் உயர்வதில் எந்தவித தடையும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.