- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி மேல் வெற்றி பெற ஏற்ற வேண்டிய தீபம்

வெற்றி மேல் வெற்றி பெற ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

வெற்றி என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது கிடையாது. முயற்சி செய்து கொண்டே இருந்தால் தான் வெற்றியை அடைய முடியும். எவ்வளவு முயற்சி செய்தும் சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஏற்ற வேண்டிய எளிய தீப வழிபாட்டினை பற்றிய ஆன்மிகம் சார்ந்த பரிகார தொகுப்பினை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பிறந்த குழந்தைக்கு ஒரு வயதிற்குள் நடந்து விடுவோமா? என்கிற போட்டி நிலவும். அதில் முதன் முதலில் ஜெய்த்து காட்டுகிறோம். அப்போதிலிருந்து ஒவ்வொரு படிப்படியாக போட்டிகளை வென்றெடுத்து தான் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருப்போம். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் இருக்கும்.

- Advertisement -

குடும்ப பொறுப்பினை சுமப்பவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று குடும்பத்தினை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும், பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்பார்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்று இளைஞர்கள் ஒரு பக்கம் நினைப்பதும் உண்டு. மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்போம்.

இந்த வெற்றிப் பாதைகளில் ஏராளமான தோல்வியை கண்டு துவண்டவர்கள் கடைசியாக வெறுத்துப் போய் மனம் தளர்ந்து அமர்ந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருள் இருந்தால் தான், அடுத்த படியை நோக்கி முன்னேற முடியும். எவ்வளவுதான் நாம் சாதிக்க திறமை கொண்டிருந்தாலும், இறையருள் இல்லாவிட்டால் எதையுமே வெல்ல முடியாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இறையருள் ஒன்றே வெற்றிக்கனியை எளிதாக எட்டித் தரும். இறையருள் பெற, நீங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்க, வெற்றியை முதன் முதலில் ருசிக்க சனிக்கிழமை தோறும் அரச மரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

அங்கு சென்று 9 அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி இரட்டை திரியை ஒன்றாக்கி தீபம் ஏற்ற வேண்டும். ரெண்டு திரிகளை எண்ணெயில் போட்டு முறுக்கிக் கொள்ளுங்கள். பூஜைக்கு உகந்த எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. 9 புதிய பேனாக்கள் வாங்கிக் கொள்ளுங்கள். 9 அகல் விளக்குகளிலும் தீபம் ஏற்றிய பின்பு மனதார பிரார்த்தித்து விநாயகர் அகவல் படியுங்கள். தெய்வ சக்தி மிகுந்த இந்த அகவல் மன தைரியத்தை கொடுக்கும். தளர்ந்த மனதை, ஒருமுகப்படுத்தி மீண்டும் நாம் ஜெயித்து காட்டுவோம், எக்காலத்திலும் தோல்வி அடைய மாட்டோம் என்கிற நம்பிக்கையை கொடுக்கும். பின்பு அங்கு வரும் பக்தர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு வாங்கி வைத்த பேனாக்களை தானம் கொடுங்கள். பேனாக்களுக்கு பதிலாக பென்சில்களையும் நீங்கள் வழங்கலாம்.

இதையும் படிக்கலாமே:
நாவூறும் பூண்டு கார தோசை செய்வது எப்படி?

இப்படி செய்யும் பொழுது நீங்கள் வாங்கிக் கொடுத்த எழுதுகோலில் இருக்கும் மை தீர்வதற்குள் உங்களுடைய வெற்றி உங்கள் வசமாகி இருக்கும். சக்தி மிகுந்த இந்த எளிய பரிகாரத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து 9 வாரங்கள் செய்தாக வேண்டும். இடையில் எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் பரிகாரத்தை பாதையில் நிறுத்தக்கூடாது. பெண்களாக இருப்பின் தீட்டு காலத்தை தவிர மற்ற சனிக்கிழமைகளில் பரிகாரங்களை தொடரலாம். வெற்றி என்பது நம் ஆழ்மன எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. விடா முயற்சியும், ஒருமுக பன்மையும், இறையருளும் சேர்ந்து நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சற்று முன்