இன்று ஆவணி மாத அமாவாசை திதி அல்லவா. இன்றைய நாள் காலை நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் நிறைவாக செய்து முடித்து விட வேண்டும். இன்று இரவு நம் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டும். நம் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகள் விலக, கண்திருஷ்டி விலக எலுமிச்சம் பழத்தை வைத்து செய்ய போகும் ஒரு பரிகாரத்தைப் பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த பரிகாரத்துக்கு ஒரே ஒரு எலுமிச்சம் பழம் போதும். வீட்டில் இருக்கும், ஃப்ரிட்ஜில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தாதீங்க. கடைக்கு சென்று பேரம் பேசாமல் காசு கொடுத்து கரும்புள்ளிகள் இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
திருஷ்டி கழிக்க எலுமிச்சை பழ பரிகாரம்
இன்று இரவு 9 மணிக்கு மேலாக இரவு 12 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்து கொள்ளலாம். ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நீல நிற பேனாவிலோ அல்லது சிவப்பு நிற பேனாவிலோ அந்த எலுமிச்சம் பழத்தில் 2579 என்ற நம்பரை எழுதிக் கொள்ளுங்கள்.
உங்களுடைய இடது கையில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொண்டு உங்களுடைய தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். இப்படி எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை சுற்றும் போது safe guard limit be இந்த வார்த்தையை மூன்று முறை சொல்ல வேண்டும். (இந்த நம்பருக்கும் இந்த வார்த்தைக்கும் மிகப்பெரிய மகத்துவம் இருக்கிறது.)
உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் அமர வைத்து எலுமிச்சம் பழத்தில், மேலே சொன்ன நம்பரை எழுதி, அவர்களை மூன்று முறை சுற்றும் போது இந்த மந்திர வார்த்தையை சொல்லலாம். பிறகு உங்களுக்கு நீங்களே இந்த எலுமிச்சம் பழத்தை இந்த வார்த்தையை சொல்லி சுற்றி போட்டுக் கொள்ளலாம்.
இப்படி செய்யும் போது உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட சக்தியானது அதிவிரைவாக வெளியேறிவிடும். எலுமிச்சம் பழத்தை இப்படி தலையை சுற்றிய பிறகு உடனடியாக ஒரு பேப்பரில் வைத்து மடித்து வீட்டிற்கு வெளியே தூக்கி போட்டு விட வேண்டும். வீட்டிற்குள் இதை வைக்கக்கூடாது. குப்பை கூடையில் போட்டாலும் குப்பை கூடையை எடுத்து வீட்டுக்கு வெளி பக்கத்தில் வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: தரித்திரம் விலக குளியல் பரிகாரம்
நிச்சயம் உங்கள் உடம்பை பிடித்த கெட்ட சக்தி கண் திருஷ்டியை எல்லாம் விளக்கியதை நன்றாக உணர முடியும். அடுத்த நாளிலிருந்து சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். நஷ்டமடைந்த உங்கள் தொழில் நல்லபடியாக நடக்கும். உடல் சோர்வு இருக்காது. உடம்பை பிடித்த நோய் நொடி பிரச்சனைகள் கூட நீங்கும். சக்தி வாய்ந்த இந்த நாளில் சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரம் நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். வார்த்தையும் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது