மங்களகரமான பொருட்கள் அனைத்திலும் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறாள் என்று அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட மங்கள கரமான பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்கும் பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் குடியிருப்பாள் என்றும் கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமி தாயார் குடியிருக்க கூடிய மிகவும் முக்கியமான அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய ஒரு மங்களகரமான பொருள் என்றால் அதுதான் குங்குமச்சிமிழ். குங்குமச்சிமிழ் இல்லாத இல்லமே இருக்காது. அப்படியே இல்லையென்றால் முதலில் குங்குமச்சிமிழை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குங்குமச்சிமிழ் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வீற்றிருப்பாள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குங்குமச்சிமிழை வைத்து எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி பலவகையான பொருட்களில் குடியிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி மகாலட்சுமி தாயார் குடியிருக்க கூடிய ஒரு முக்கியமான பொருள் என்றால் அதுதான் குங்குமச்சிமிழ். வீட்டில் கண்டிப்பாக முறையில் குங்குமச்சிமிழ் என்பது இருக்க வேண்டும். அந்த குங்குமச்சிமிழில் சிறிதளவாவது குங்குமம் இருக்க வேண்டும். வெறும் குங்குமச்சிமிழாக இருக்கக்கூடாது. இந்த குங்குமம் என்பது தாழம்பூ குங்குமமாக இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தாயாருக்கோ அல்லது அம்பிகைக்கோ அர்ச்சனை செய்த குங்குமத்தை அதில் வைத்து தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
அர்ச்சனை செய்த குங்குமம் இல்லை என்பவர்கள் கூட மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம். இந்த குங்குமச்சிமிழ் வெள்ளி, தங்கம் அல்லது தேக்கு மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இதில் வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்குள் வெள்ளி, தங்க நாணயம் இருக்கும் பட்சத்தில் அதை போட்டுக் கொள்ளலாம். வெள்ளி, தங்க நாணயம் இல்லை என்பவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை நம்முடைய கையில் வைத்துக்கொண்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு மகாலட்சுமி தாயாரின் போற்றிகளை 108 முறை கூற வேண்டும். போற்றிகள் தெரியாது என்பவர்கள் “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி” என்று கூறலாம் அல்லது “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ” என்னும் மந்திரத்தையும் 108 முறை கூறலாம். 108 முறை கூற நேரமில்லை என்பவர்கள், 14 முறை கூறலாம். இப்படி கூறி முடித்த பிறகு அதில் இருக்கக்கூடிய குங்குமத்தை எடுத்து நம்முடைய நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். எந்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த காரியம் வெற்றி அடையும்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர பூட்டு பரிகாரம்
அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய குங்குமச்சிமிழை வைத்து இப்படி எளிமையான முறையில் மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.