- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி மாதம் தளிகை வழிபாடு

புரட்டாசி மாதம் தளிகை வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் என்றாலே அது செல்வ கடாட்சத்துக்கு உரிய மாதம். செல்வ கடாட்சத்துக்கு உரிய கடவுள் பெருமாள். திருப்பதியில் ஆரவாரத்துடன் இந்த புரட்டாசி மாத உற்சவம் பெருமாளுக்கு நடக்கும். திருப்பதி எவ்வளவு செல்வ செழிப்போடு வளர்ந்து நிற்கிறது. அதேபோல புரட்டாசி மாதம் நம்முடைய வீட்டிலும் பெருமாளை ஆரவாரத்துடன் கொண்டாடி வழிபாட்டை மேற்கொண்டால் நம்முடைய வீட்டிலும் செல்வம் புரளும்.

இந்த புரட்டாசி மாதத்தில் வந்திருக்கும் நான்கு சனிக்கிழமைகளும் சிறப்பு வாய்ந்த சனிக்கிழமைகள் தான். இதில் நீங்கள் எந்த சனிக்கிழமை தளிகை போட்டாலும் உங்கள் வீட்டில் செல்வ செழிப்பானது பல மடங்கு உயரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தாலும் எந்தெந்த சனிக்கிழமையில் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது சிறப்பு என்பதை பற்றிய ஒரு சில ஆன்மீகம் சார்ந்த வழிகாட்டுதலை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

இந்த மாதம் மொத்தம் நான்கு சனிக்கிழமைகள் இருக்கிறது அல்லவா. 21.9.2024 மகாபாரணி நட்சத்திரத்தோடு முதல் சனிக்கிழமை வந்திருக்கிறது. இந்த சனிக்கிழமையில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது சிறப்பு என்பது சில ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. (ஏனென்றால் இந்த வாரத்தில் மகாளய பட்சமும் சேர்ந்து இருக்கிறது.) முடிந்தால் முதலில் தளிகை போட்டுவிட்டு பெருமாள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். மாலை 6:00 மணிக்கு மேலாக கூட முன்னோர்கள் வழிபாட்டை வீட்டில் செய்து கொள்ளலாம். முதல் வார சனிக்கிழமை தளிகை உகந்த வாரம் தான்.

28.9.2024 அன்று ஏகாதசி திதியோடு ஒரு சனிக்கிழமை திதி வந்திருக்கிறது. இரண்டாவது வாரம் ஏகாதசி திதி, வந்திருப்பதால் நிறைய பேர் விரதம் இருப்பீர்கள். பெருமாளுக்கு தளிகையிட பல வகையான பிரசாதம் தயார் செய்வீர்கள். அன்று விரதம் இருந்தால் இந்த பிரசாதங்களை எல்லாம் உங்களால் சாப்பிட முடியாது. ஆகவே இந்த 2வது வாரம் உங்களுடைய சௌகரியம் என்னவோ.

- Advertisement -

வெறும் மாவிளக்கு போட்டு கூட இந்த வாரம் பெருமாள் வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. விரதம் இல்லாதவர்கள் இந்த நாளில் தளிகை போட்டால் தவறு இல்லை. ரொம்ப ரொம்ப உகந்த நாள் இந்த இரண்டாவது வாரம் பெருமாளுக்கு தளிகை இடுவதற்கு.

5.10.2024ஆம் தேதி ஒரு சனிக்கிழமை வந்திருக்கிறது. இது மூன்றாவது சனிக்கிழமை. ஆனால் இந்த சனிக்கிழமை நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கிறது. திருதியை திதியும் இந்த நாளில் சேர்ந்து இருக்கிறது. இந்த நாளில் மகாலட்சுமி வழிபாட்டை வீட்டில் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த நாளில் நீங்கள் பெருமாளையும் தாயாரையும் சேர்த்து வழிபாடு செய்தால் உங்கள் பண கஷ்டம் தீரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

- Advertisement -

என்னங்க சனிக்கிழமை என்றால் பெருமாளுக்கு தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் மகாலட்சுமியை வழிபட சொல்கிறீர்கள். முதல் இரண்டு வாரத்தில் பெருமாளை வழிபாடு செய்து விட்டவர்கள். இந்த மூன்றாவது வாரம் மகாலட்சுமியை பிரத்தியேகமாக கும்பிடலாம். முதல் இரண்டு வாரம் சனிக்கிழமை தளிகை வழிபாடு செய்யவில்லை என்றால் இந்த மூன்றாவது வாரம் பெருமாளையும் மகாலட்சுமி தேவியையும் ஒரு சேர சேர்த்து வழிபாடு செய்யுங்கள் ரொம்ப ரொம்ப நல்லது.

கடைசி சனிக்கிழமை நான்காவது வர சனிக்கிழமை 12.10.2024 திருவோணம் நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது. கேட்கவா வேண்டும், பெருமாளுக்கே உரிய நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம். இந்த நாளில் பெருமாளை தளிகை போட்டு வழிபாடு செய்தாலும் சரி, அல்லது வெறும் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தாலும் சரி அல்லது வெறும் துளசி இலைகளை வாங்கி போட்டு கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி வழிபாடு செய்தாலும் சரி, உங்களுக்கு மொத்த புண்ணியமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: துயரங்களை துடைக்கும் வாராகி வழிபாடு

மேல் சொன்ன வழிபாடுகளை இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு பெருமாள் லட்ச இலட்சமாக அல்ல, கோடி கோடியாக செல்வ வளத்தை வாரி வாரி கொடுப்பார் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்