- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுயரங்களை துடைக்கும் வாராகி வழிபாடு

துயரங்களை துடைக்கும் வாராகி வழிபாடு

- Advertisement -

ராஜராஜேஸ்வரியின் படைத்த தலைவியாக திகழக்கூடியவர் வாராகி அம்மன். மேலும் ராஜ ராஜ சோழனின் குலதெய்வமாகவும் வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நம் வழிபாடு செய்யும் பொழுது எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்களும் துயரங்களும் விலகுவதோடு தடைகள் அனைத்தும் விலகும். ஒரு குறிப்பிட்ட வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 48 நாட்கள் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வாராகி அம்மனை எந்த மந்திரம் கூறி எப்படி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்றும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் தீரும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பலரும் வாராகி அம்மனை வீட்டில் சிலையாகவோ, படமாகவோ வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். இப்படி நாம் எந்த ரூபத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்தாலும் அவள் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய தாயாகவே திகழ்கிறார். அப்படிப்பட்ட தாயின் அருளை முழுமையாக பெறுவதற்கு அகத்திய மாமுனிவர் கூறிய ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் 108 முறை என்ற வீதம் நாம் கூறும் பொழுது வாராகி அம்மனின் அருள் நமக்கு கிடைப்பதோடு நம் வாழ்வில் இருக்கக்கூடிய துயரங்களும் நீங்கும் அதே சமயம் நம்முடைய வேண்டுதல்களும் நிறைவேறும்.

- Advertisement -

உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து இந்த பூஜையை செய்ய ஆரம்பிக்க வேண்டும். வீட்டில் வாராஹி அம்மனின் சிலை இருக்கும் பட்சத்தில் அந்த சிலைக்கு சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சந்தனம் குங்குமம் வைத்துக்கொள்ளுங்கள். கருங்குவளை அல்லது நித்திய மல்லி இந்த இரண்டு மலர்கள் ஏதாவது ஒரு மலரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் அம்மனுக்கு கருநீலம் அல்லது நீல நிறத்தில் இருக்கக்கூடிய ஆடையை அணிவிக்க வேண்டும். தாழம்பூ தூபம் காட்டி, தாழம்பூ குங்குமத்தால் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் அம்மனுக்கு தீபம் ஏற்றும்பொழுது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் இரண்டு கிராம்பு, சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அம்மனுக்கு நெய்வேத்தியமாக பருப்பு வடை, கிழங்கு வகைகள், தயிர் சாதம் இவற்றில் ஏதாது ஒன்றை வைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். வீட்டில் சிலையோ, படமோ இல்லை என்பவர்கள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் பட்சத்தில் தினமும் ஆலயத்திற்கு சென்று வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தேங்காயை உடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு பஞ்சதிரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடிந்த பிறகு அங்கேயே அமர்ந்து வாராகி அம்மனின் முன்பாக இந்த மந்திரத்தை கூறலாம்.

- Advertisement -

மந்திரம்
ஓம் வாம் வாராகி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராகி கன்யகாயை நம

இதையும் படிக்கலாமே:வெற்றிகளை குவிக்கும் வெற்றிவேலன் மந்திரம்

அகத்திய மாமுனிவர் அருளிய இந்த அற்புத மந்திரத்தை நாம் தினமும் உச்சரித்து வாராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெற்று நலமுடன் வாழ்வோம் என்ற தகவலை கூடி இந்த பதிவிலே நிறை

சற்று முன்