- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க புரட்டாசி சனிக்கிழமை பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க புரட்டாசி சனிக்கிழமை பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகளுக்கு மூல காரணமாக திகழக்கூடியது பணம்தான். பணம் இருந்தால் பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் நமக்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும். மகாலட்சுமியின் அருள் கிடைப்பதற்கு மகாவிஷ்ணுவின் அருளும் வேண்டும். இப்படி இவர்கள் இருவரின் அருளையும் பெற்று பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு புரட்டாசி முதல் சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி சனிக்கிழமை பரிகாரம்

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி. மகாலட்சுமியை தன்னகத்தே வைத்திருக்கக் கூடியவர் மகாவிஷ்ணு. அதனால் நாம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி இவர்கள் இருவரையும் ஒருசேர வழிபட்டால்தான் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நாம் வாழும் காலத்தில் நன்மைகள் நடைபெற வேண்டும் என்றால் காக்கும் தொழிலை செய்யும் பெருமாளை நாம் வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய மாதமாக திகழக்கூடியதுதான் புரட்டாசி மாதம்.

- Advertisement -

ஆடி வெள்ளி எந்த அளவிற்கு அம்மனுக்கு விசேஷமான ஒன்றோ, அதேபோல் தான் புரட்டாசி சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடுகளும் பரிகாரங்களும் நமக்கு பல அபரிவிதமான பலன்களை தரும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பரிகாரங்களில் ஒன்றைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து இந்த பரிகாரத்தை வீட்டு பூஜை அறையிலும் செய்யலாம் பெருமாளின் ஆலயத்திற்கு சென்றும் செய்யலாம். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் மூன்று. இதை மூன்றையும் பெருமாளின் பாதத்தில் வைத்து நாம் வழிபட வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் இந்த மூன்று பொருட்களையும் பெருமாளின் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அவரின் பாதத்தில் வைத்து எடுத்து வந்தால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

அப்படி செய்ய இயலாது என்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளின் பணத்திற்கு முன்பாக வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய மூன்று பொருட்கள் ஏலக்காய், பச்சை கற்பூரம், துளசி. இவை மூன்றுமே பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய பொருட்களாக கருதப்படுகின்றது. பொதுவாக பெருமாள் தீர்த்தம் என்று கூறக்கூடிய தீர்த்தத்தில் இந்த மூன்றுமே சேர்ந்திருக்கும். இந்த மூன்றிற்கும் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தியும் இருக்கிறது.

ஒரே ஒரு ஏலக்காய், சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஒரு துளசி இலை. இது மூன்றும் இருந்தால் போதும். இதை அப்படியே பெருமாளின் பாதத்தில் வைத்து விடுங்கள். பெருமாளுக்கு என்று தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இனிப்பு பொருளை வைத்து வழிபடலாம். நெய்வேத்தியத்தை வைத்துவிட்டு “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை எல்லாம் காட்டி முடித்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காய், பச்சை கற்பூரம், துளசி இலை மூன்றும் சிறிது நேரம் அப்படியே பெருமாளின் பாதத்தில் இருக்கட்டும்.

பிறகு இதை எடுத்து அன்றாடம் செலவிற்காக எந்த இடத்தில் பணத்தை வைத்து எடுப்போமோ அந்த இடத்தில் இந்த மூன்று பொருட்களையும் வைத்துவிட வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களால் வழிபாடு செய்ய இயலாத பட்சத்தில் சிறு குழந்தைகளிடம் கொடுத்தாவது பெருமாளின் பாதத்தில் வைத்து எடுத்து தர சொல்லலாம். இப்படி நாம் செய்வதன் மூலம் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்குரிய செல்வ செழிப்பு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
கடன் தீரவும், பணம் நகை சேரவும் பெருமாள் வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று நம்முடைய பணப்பிரச்சினை தீர்வதற்குரிய இந்த எளிமையான பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுவோம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்