அடுப்பங்கரையில் அடைப்பட்டு கொண்டிருந்த பெண்கள் அகிலத்தையும் ஆளக்கூடிய அளவிற்கு வளர்ந்து நிற்பது கல்வியால் தான். கல்விதான் ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கை தரும் கருவியாக இருக்கிறது. கல்வியும், கைத்தொழிலும் இருந்தால் போதும் சாதனை புரிய நினைக்கும் அத்தனை பெண்களுக்கும் இறைவனே பக்க பலமாக துணை நிற்பார். வைராக்கியமாக சாதனை புரிய நினைக்கும் பெண்களுக்கு இந்த ஒரு பொருள் கவசமாக இருக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பெண்களின் வெற்றிக்கு சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்பது போன்ற தகவல்களுக்கு தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
யாரையும் ஏமாற்றாமல், யாரிடமும் ஏமாந்து போகாமல் சுயமாக உழைத்து பெண்கள் முன்னேற, இறையருள் அவர்களுக்கு கிடைக்க துர்க்கை தாயாரை செவ்வாய் தோறும் வழிபடுவது நல்லது. துர்க்கை அம்மன் பகைவரை வெல்லக்கூடிய சக்திகளை பெண்களுக்கு கொடுக்கக் கூடிய தெய்வம். பெண்கள் நெற்றியில் எப்பொழுதும் திருநீறு அணிய தைரியம் பிறக்கும்.
பெண்கள் உங்களுடைய பையில் எப்பொழுதும் ஒரு விரலி மஞ்சள் வைத்திருக்க துணிவு பிறக்கும். நல்ல நாளாக பார்த்து கடைக்குச் சென்று நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் விரலி மஞ்சள் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் விரலி மஞ்சள் வாங்கக் கூடிய நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விரலி மஞ்சள் வாங்கி வந்த உடன், அதை ஒரு மஞ்சள் கலந்த தண்ணீரில் முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் அதற்கு சந்தன, குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். காலையில் எழுந்ததும் குளித்து முடித்து சுத்த பத்தமாக பூஜை அறைக்கு சென்று நீங்கள் பூஜை அறையில் வைத்த விரலி மஞ்சளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்த பின்னர் நீங்கள் கையில் வைத்துள்ள விரலி மஞ்சள் உங்களுடைய பையில் வைத்துக் கொண்டு அன்றாட வேலையை துவங்குங்கள்.
மந்திரம்:
ஓம் வஜ்ரகாய நமஹ!!!
வேலை தேடி அலையும் பெண்கள், வேலையில் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எதிர்பார்த்த வேலையை செய்ய நினைக்கும் பெண்கள், உங்களுடைய பையில் எப்பொழுதும் விரலி மஞ்சள் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு இறையருளை பெற்று தரும். தன்னம்பிக்கையும், தைரியத்தையும் வளர செய்யும். ஏதோ ஒரு பாதுகாப்பு சக்தி வாய்ந்த கவசம் நம்மிடம் இருப்பதாக உணர வைக்கும்.
இதையும் படிக்கலாமே:
இறப்பை தடுத்து நிறுத்தக்கூடிய புண்ணியம்
பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் இந்த விரலி மஞ்சளை மீண்டும் ஒரு முறை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து சந்தன, குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தொடர்ந்து இதே போல ஒவ்வொரு நாளும் 16 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து, விரலி மஞ்சள் உடன் வைத்துக் கொண்டால் உங்களுக்கு தோல்வி என்பதே இருக்காது. வாழ்க்கையில் சாதனை புரிய வயதும் ஒரு தடையில்லை, எந்த வயதினராலும் இறை நம்பிக்கையுடன், நேர்மையாகவும், ஒழுக்கத்துடனும் இருந்தால் எத்தகைய இலக்கானாலும் எளிதில் நீங்கள் அடையலாம்.