ஒவ்வொரு வீட்டிலும் பற்றி எரியக்கூடிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கடனை வாங்கிவிட்டு ஒவ்வொரு நிமிடமும் அதை திருப்பித் தர முடியாமல் தவித்து வருகின்றோம். நமக்கு கடன் கொடுத்தவர்கள் எந்த நேரத்தில் வந்து சண்டை போடுவார்கள் பணத்தை மொத்தமாக திருப்பி கேட்டு கழுத்தை நெறிப்பார்கள் என்பது தெரியாது. இந்த சூழ்நிலை நம்மில் பல பேருக்கு இருக்கிறது.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் கடன் வாங்குவதை குறைக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பி அடைக்க அயராது உழைக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதோடு சேர்த்து ஒரு சில ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களையும் முயற்சி செய்து பாருங்கள். ஏதாவது ஒரு பரிகாரம் உங்களுக்கு உடனடியாக பலனை கொடுக்கும். அப்படி தெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் ஒரு பரிகாரத்தை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நாளை ஏகாதசி திதியோடு நாளை புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமை வந்திருக்கிறது. பெருமாள் கடனை அடைக்க கூடிய வேலையை சுலபமாக செய்துவிடுவார். காரணம் கடன் பிரச்சனையால் ஒருவருக்கு எவ்வளவு கஷ்டம் வரும் என்பது அவருக்கு நன்றாகவே புரியும். உங்களுடைய கடன் பிரச்சனையையும் அவரிடம் சொன்னீர்கள் என்றால், அவர் நிச்சயம் அதை செவி கொடுத்து கேட்டு, அந்த பிரச்சனைக்கு தீர்வை கொடுப்பார்.
நாளைய தினம் நீங்கள் தளுகை போடுவதாக இருந்தால் அந்த வேலையை முடித்து விடுங்கள். மாவிளக்கு போடுவதாக இருந்தால் அந்த வேலையையும் முடித்து விடுங்கள். பிறகு ஒரு மஞ்சள் துணியை தயார் செய்து கொள்ளுங்கள். வெள்ளை காட்டன் துணியை எடுத்து மஞ்சள் கரைசலில் முக்கி, உலர வைத்து அந்த மஞ்சள் துணி தயாரிக்கப்பட வேண்டும். இந்த மஞ்சள் துணியில் 1 ஸ்பூன் கல் உப்பு, 1 ஏலக்காய், 1 நாமக்கட்டி வைக்க வேண்டும்.
நாமக்கட்டி குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. பெருமாளுக்கு நாமம் போடும்போது நாமக்கட்டியை பயன்படுத்துவார்கள். குளிர்ந்த நாமக்கட்டியை கல்லுப்போடு சேர்த்து ஏலக்காய் வைத்து, மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு பெருமாள் பாதத்தில் வைத்து என்னுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால், பெருமாள் மனது குளிரும்.
பற்றி எரியும் உங்கள் கடன் பிரச்சனையானது படிப்படியாக குறையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாமக்கட்டி என்பது குளிர்ச்சியை கொடுப்பது அல்லவா. இந்த நாம கட்டி பெருமாளுக்கு எப்படி குளிர்ச்சியை கொடுக்கிறது அதேபோல உங்களுக்கு இந்த வழிபாடு, பற்றி எரியும் கடனை குளிர வைக்கும் இதுதான் இந்த வழிபாட்டில் இருக்கும் நம்பிக்கை.
பெரும்பாலும் இப்போது நாமக்கட்டி யார் வீட்டிலும் இருப்பது கிடையாது. அதை நாம் பயன்படுத்துவதும் கிடையாது. பக்கத்தில் இருக்கும் மளிகை கடைக்கு போய் கேட்டாலே 10 ரூபாய்க்கு நாம கட்டி கிடைக்கும். ஒரே ஒரு நாமக்கட்டியை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். சரி வழிபாட்டை முடித்து விட்டோம் இந்த முடிச்சை பிறகு என்ன செய்வது. புரட்டாசி மாதம் முடியும் வரை இந்த முடிச்சு பெருமாளின் பாதத்திலேயே இருக்கட்டும்.
புரட்டாசி மாதம் முடிந்த பின்பும் அந்த முடிச்சில் இருக்கும் கல்லுப்பையும் நாமக்கட்டியையும் தண்ணீரில் போட்டு விடுங்கள் கரைந்து விடும். ஏலக்காயை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே மண்பாங்கான இடத்தில் போட்டு விடுங்கள். அது அப்படியே மக்கிப்போகும். இந்த நாமக்கட்டியும் கல் உப்பும் தண்ணீரில் கரைந்தது போல உங்கள் கடனும் கூடிய விரைவில் கரையத் தொடங்கும்.
இதையும் படிக்கலாமே: 28.9.2024 புரட்டாசி 2வது சனிக்கிழமை
இந்த எளிமையான பரிகாரத்தை புரட்டாசி மாதம் பெருமாளை நினைத்து நாளை வரக்கூடிய சனிக்கிழமையில் செய்யலாம். நாளை வரக்கூடிய சனிக்கிழமையில் இந்த வழிபாட்டை செய்ய முடியாது, சூழ்நிலை சரியில்லை என்பவர்கள் அடுத்து வரக்கூடிய இரண்டு புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் உங்கள் கடன் சுமை குறையும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.