- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல காரியங்களிலும் வெற்றி பெற மந்திரம்

சகல காரியங்களிலும் வெற்றி பெற மந்திரம்

- Advertisement -

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு ஆசை இருக்கும். தற்போது இருக்கக்கூடிய நிலைமையில் இருந்து கொஞ்சமாவது முன்னேற வேண்டும். வாழ்க்கையில் அடுத்த படியில் காலை எடுத்து வைக்க வேண்டும். நாம் மேற்கொள்ள கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும். வாழ்க்கையில் சீக்கிரமாக வெற்றியடைய ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று நிச்சயம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தேடல் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ஏனோ தெரியவில்லை. நம்முடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியுறும்போது வாழ்க்கையின் அதல பாதாளத்தில் விழுந்து விட்டோமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. முதலில், தோற்றபிறகு வரும் பயத்தை நம்மிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டும். இறைவன் மீது நம்பிக்கையும் வழிபாட்டையும் செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு.

- Advertisement -

எந்த அம்பாளை வேண்டுமென்றாலும் நீங்கள் நினைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஒரு அம்பாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு துர்க்கை அம்மனை கும்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தினமும் அந்த துர்க்கை அம்மனை நினைத்து காரிய வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நீங்கள் ஏதோ ஒரு புது முயற்சியில் ஈடுபட தொடங்கி இருக்கிறீர்கள். புது தொழில் தொடங்க, புது படிப்பு கத்துக்க போறீங்க, அல்லது புது வியாபாரம் செய்யப் போறீங்க அல்லது புது வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் அதில் வெற்றி காண வேண்டும் என்றால் என்ன செய்வது.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து நீங்கள் கும்பிட வேண்டும் என்று நினைத்த துர்க்கை அம்மனை மனதார நினைத்துக் கொள்ளவும். நான் கையில் எடுத்த காரியம் எனக்கு வெற்றியை தான் கொடுக்க வேண்டும். அதற்கு நீ தான் துணையாக நிற்க வேண்டும் என்று அடம் பிடித்து அந்த இறைவனை வழிபாடு செய்து விட்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு உங்களுடைய நாளை தொடங்குங்கள்.

ஜெயம் தரும் மந்திரம்

சகல காரிய ஜெயப்பிரதே ஜெய ஜெய ! Sagala karya jayapradhe !

- Advertisement -

வெறும் ஒரே ஒரு வரி மந்திரம் தான் இந்த மந்திரத்தை தினமும் சொல்லிவிட்டு உங்கள் நாளை துவங்கினால் உங்களுடைய அந்த நாள் வெற்றிகரமான நாளாக செல்லும். முயற்சிகளில் தோல்வி இருக்காது. குறிப்பிட்ட அந்த முயற்சியில் ரொம்பவும் பக்கமாக போய்க்கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட அந்த இடத்துக்கு போயிட்டீங்க.

ஒரு சில வேலைகளை செய்வதற்கு முன்பு ஒரு நிமிடம் நமக்கு பதபதப்பு வரும். அல்லது எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நிமிடம் அது நம் கைக்கு வரும் போது ஒரு பதட்டம் வரும். அந்த பதட்டத்தில் இருந்து எல்லாம் மீள்வதற்கு நின்ற இடத்தில் இருந்தே அம்மனை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

உங்கள் பதட்டெல்லாம் இறங்கி உங்களுக்கான தைரியம் பிறந்து அந்த குறிப்பிட்ட வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரம் இது. நின்ற இடத்தில் இருந்தே இதை நீங்கள் சொல்ல சொல்ல உங்களுக்குள் ஒரு நெருப்பு எரியும் பாருங்க. அது வார்த்தையால் சொல்லி யாருக்கும் புரிய வைக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

வாழ்க்கையில் ரொம்பவும் நொந்து நூலாக போய் இருப்பவர்கள், மீண்டும் வாழ்க்கையை துவங்க ஆரம்பிப்பவர்கள் எல்லாம் இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கோங்க சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேறி விடுவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்