- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீரவும் வீடு கட்டவும் வழிபாடு

கடன் தீரவும் வீடு கட்டவும் வழிபாடு

- Advertisement -

பெருமாள் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய மாதமாக திகழ்வது புரட்டாசி மாதம். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை என்பது பெருமானின் வழிபாட்டை மேலும் சிறப்பாக செய்ய உதவும். அன்றைய தினத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கும். பலருக்கும் பலவித வேண்டுதல்கள் இருந்தாலும் பொதுவான வேண்டுதல்கள் என்பது இருக்கும். அதுதான் கடன் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதும் சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்பதும் தான். அப்படிப்பட்ட இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கடன் தீரவும் வீடு கட்டவும் வழிபாடு

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையில் ஏதாவது ஒரு சனிக்கிழமையை தேர்வு செய்து தொடர்ச்சியாக 7 சனிக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கு முதலில் ஒரு மனை பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் மஞ்சள் துணியை விரித்து நம் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை வைக்க வேண்டும்.

பெருமாளின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற மலர்களால் பெருமாளை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் பச்சரிசி மாவு, வெல்லம், நெய், வாழைப்பழம் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிணைந்து ஏழு மாவிளக்குகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த ஏழு மாவிளக்குகளையும் தாம்பாளத்தில் வைத்து நெய் ஊற்றி திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய வீடு ஒன்றை வாங்கி வந்து பெருமாளுக்கு முன்பாக வைக்க வேண்டும். கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏழு ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து நீள வாக்கில் இருக்கக்கூடிய மஞ்சள் துணியை எடுத்து கொண்டு அதில் முதலில் ஒரு ரூபாயை வைத்து ஒரு முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். சிறிது இடம் விட்டு அடுத்த ஒரு ரூபாயை வைத்து ஒரு முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஏழு ரூபாய்களையும் முடிச்சாக போட்டு அதை மாலையாக தயார் செய்து பெருமாளுக்கு போட்டு விட வேண்டும். இப்பொழுது தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக பெருமாளுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளின் மந்திரங்கள் தெரிந்தவர்கள் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். மந்திரம் தெரியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை கூறலாம்.

- Advertisement -

இந்த முறையில் தொடர்ச்சியாக 7 சனிக்கிழமைகள் 7 மா விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் பொழுது எந்த வேண்டுதலை நினைத்து வழிபாடு செய்கிறோமோ அந்த வேண்டுதல் அடுத்த வருடம் வரக்கூடிய புரட்டாசி மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவடைந்த பிறகு ஒரு ரூபாய் நாணயத்தையும் வெள்ளி வீட்டையும் பெருமாளின் ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டு முறையை முழு மனதுடன் பின்பற்றி பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதால் முழு மனதுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்