புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாகவும் முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய நாளாகவும் கருதப்படுகிறது. அதோடு அமாவாசை தினத்தில் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் அதிக அளவில் பலனைத் தரும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் தடைகளும் நீங்குவதற்கு புரட்டாசி அமாவாசை அன்று விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை தீர்க்கும் மஹாளய அமாவாசை
எப்பொழுதும் போல் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் புரட்டாசி அமாவாசை தினத்திலும் அதை செய்வார்கள். ஒரு சிலர் புனித ஆறுகள் ஓடுகின்ற இடத்தில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடிப்பார்கள். அமாவாசை தினத்தன்று தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை பசு மாட்டிற்கு தானமாக தருவதன் மூலமும், ஏழை எளியவர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் அன்னதானம் தருவதன் மூலமும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற முடியும்.
இந்த முன்னோர்களின் வழிபாட்டை செய்வதோடு நாம் விநாயகர் பெருமானையும் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒன்று என்றால் அது அருகம்புல் தான். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை வாங்கி மாலையாக கட்டி விநாயகருக்கு சூட்ட வேண்டும்.
அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று இந்த அருகம்புல் மாலையை கொடுத்து வழிபாடு செய்யலாம் அல்லது வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் படத்திற்கு போட்டும் வழிபாடு செய்யலாம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக திருமண தடை, தொழில் தடை, வேலை தடை, பண ரீதியாக ஏற்படக்கூடிய தடைகள் இவை அனைத்தும் நீங்கும்.
இதேபோல் மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணமும் வருகிறது. சூரிய கிரகணத்தின் சமயத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கும் மந்திரத்திற்கும் பல மடங்கு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சூரிய கிரகணம் இரவு 9 மணி 14 நிமிடத்திற்கு ஆரம்பித்து மறுநாள் விடியற்காலை 3 மணி 17 நிமிடத்திற்கு நிறைவடைகிறது.
சூரிய கிரகணம் ஆரம்பித்த பிறகு அருகம்புல்லை பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விநாயகரின் பாதத்தில் வைத்து உங்களுடைய வேண்டுதல்கள் என்னவோ அதை மனதார கூறி விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை
மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் வழிபாட்டை புரட்டாசி அமாவாசை தினத்தில் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்குவதோடு அனைத்து விதமான தடைகளும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.