ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் பல விதங்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு செல்வ செழிப்பு ஏற்பட்டு விட்டாலே அவருக்கு பல விதமான பிரச்சனைகள் வராமல் தவிர்க்கப்படும். இந்த செல்வ செழிப்பை உயர்த்துவதற்காக தான் பலரும் வேலை பார்க்கிறார்கள் இன்னும் சிலரோ சொந்தமாக தொழில் வியாபாரம் செய்கிறார்கள். இவற்றில் தடைகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு செல்வ வளம் என்பது ஏற்படாது. இந்த செல்வ வளத்தை மேம்படுத்தவும் தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வீட்டில் வைத்து வழிபட வேண்டிய விநாயகரை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குபேர விநாயகர் வழிபாடு
முழுமுதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை மனதார வழிபாடு செய்துவிட்டு தொடங்கும் பொழுது அந்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. திரும்பும் திசையெல்லாம் வீற்றிருக்கக் கூடிய விநாயகரை நாம் பலவிதங்களில் பல முறைகளில் வழிபாடு செய்வோம். அதிலும் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய ஒரு சூட்சுமமான வழிபாட்டு முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
செல்வ வளம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியவர்கள் குபேரர் மற்றும் மகாலட்சுமி தாயார். இவர்களின் ஆசிர்வாதத்தை பெற்ற விநாயகரை தான் நாம் குபேர விநாயகர் என்றும் லட்சுமி விநாயகர் என்றும் கூறுகிறோம். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விநாயகராக திகழ்ந்தவர் குபேர விநாயகர். குபேர விநாயகரின் படத்தையோ சிலையோ நம்முடைய வீட்டிலும் தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மிகவும் சிறிய அளவில் இருக்கக்கூடிய குபேர விநாயகரின் சிலையை வாங்கிக் கொள்ளுங்கள். படமாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ற அளவு வாங்கிக் கொள்ளலாம். வாங்கி வந்த உடன் இந்த சிலைக்கு பன்னீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு விநாயகருக்கு சந்தனம் குங்குமம் வைத்து வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் இவருக்கு முன்பாக சிறிது டைமண்ட் கற்கண்டு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதேபோல் தினமும் அருகம்புல்லை இவருக்கு வைக்க வேண்டும். தினமும் அருகம்புல் கிடைக்காது என்பவர்கள் ஏதாவது ஒரு பூவை வைத்தாவது வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக செம்பருத்தி பூ என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
இப்படி தினமும் குபேர விநாயகரை வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பன்னீரால் அபிஷேகம் செய்து இந்த முறையில் வழிபாடு செய்யலாம். படமாக இருக்கும் பட்சத்தில் பன்னீரை தெளித்து சுத்தம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் விநாயகரின் போற்றிகளையும் விநாயகரின் மந்திரத்தையும் கூறி உங்களுடைய வேண்டுதல் கோரிக்கை என்னவோ அதை முன்வைக்க வேண்டும். தொடர்ச்சியாக இந்த முறையில் குபேர விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும். இந்த வழிபாட்டை வீட்டிலும் தொழில் செய்யும் இடங்களிலும் செய்வது சிறப்பு.
இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். மேலும் வியாபாரத்திலும் தொழிலிலும் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி நல்ல லாபம் உண்டாகும். வேலையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். பிறரிடம் இருந்து வரவேண்டிய பணமும் வந்து சேரும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை விரைவிலேயே திருப்புவோம். புதிதாக நகையும் வாங்க முடியும். மேலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும்.
இதையும் படிக்கலாமே: குபேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
இந்த எளிமையான விநாயகர் வழிபாட்டை தொடர்ச்சியாக முழு மனதுடன் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளம் பெருகி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.