- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சனை தீரவும் சொந்த வீடு அமையவும் வழிபாடு

கடன் பிரச்சனை தீரவும் சொந்த வீடு அமையவும் வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும். இது பலருக்கு ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு எட்டாத கனியாகவே இருக்கும். அதே போல் எந்தவித கடனும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் பலருக்கு இருக்கும். இவை இரண்டிற்கும் காரண கர்த்தாவாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடிய முருகப்பெருமானை சஷ்டி திதியில் எந்த முறையில் வழிபட்ட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்த வீடு அமைய வழிபாடு

சொந்தமாக இடம் வாங்க வேண்டும் அல்லது சொந்த இடத்தை விற்க வேண்டும், சொந்த வீட்டில் குடியேற வேண்டும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும், அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்ப வேண்டும் என்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான் தான். அவருடைய நல்லாசியை பெற வேண்டும் என்றால் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. உகந்த திதியாக திகழ்வது சஷ்டி திதி.

- Advertisement -

சஷ்டி திதியில் முருகப்பெருமானை நாம் ஒரு சூட்சமமான முறையில் வழிபாடு செய்யும் பொழுது கடன் பிரச்சினைகள் தீரும். அதே சமயம் சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த சூட்சமமான வழிபாட்டை மாலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். பெண்களாக இருக்கும் பட்சத்தில் தீட்டு காலமாக இருந்தாலும் தாராளமாக செய்யலாம். இதற்கு எந்தவித தடைகளும் கிடையாது.

வீட்டிலும் செய்யலாம், ஆலயத்திலும் செய்யலாம். வீட்டில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களுடைய வீட்டில் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். வெறுந்தரையில் அமராமல் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும். எந்த திசை பார்த்தவாறு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம். இதற்கு நமக்கு தேவைப்படுவது ஆறு ஒரு ரூபாய் நாணயங்கள். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் தொடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இதை உங்களுடைய வலது கையில் வைத்து இடது கையால் மூடிக்கொண்டு முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு முருகப்பெருமானிடம் கடன் ரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்னும் பட்சத்தில் செல்வவளம் அதிகரிக்க வேண்டும், பணம் பல மடங்கு வரவேண்டும் என்ற நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி வேண்டிக்கொள்ள வேண்டும். சொந்த வீட்டிற்கு குடியேற வேண்டும் என்றால் அப்படியே நாம் வேண்டிக் கொள்ளலாம். இவ்வாறு வேண்டி முடித்துவிட்டு முருகப்பெருமானின் ஒரு வரி மந்திரத்தை கூற வேண்டும். இதை குறைந்தபட்சம் 20 நிமிடத்தில் இருந்த அதிகபட்சம் 30 நிமிடம் வரை கூற வேண்டும்.

எத்தனை முறை கூற வேண்டும் என்று கணக்கு கிடையாது ஆனால் நிறுத்தி நிதானத்துடன் முழு மனதுடன் எந்தவித கவனச் சிதறளும் இல்லாமல் இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரம் பாம்பன் சுவாமிகள் அருளிய மந்திரமாக கருதப்படுகிறது. மேலும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகவும் இது திகழ்வதால் இதை முழுமனதோடு கூறுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ

இந்த மந்திரத்தை கூறி முடித்துவிட்டு முருகப்பெருமானிடம் மறுபடியும் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். இவ்வாறு கூடி முடித்துவிட்டு ஒரு சிறிய சிவப்பு நிற துணியை எடுத்து அதில் நம் கையில் வைத்திருக்கும் இந்த நாணயங்களை வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். இந்த மூட்டையை பீரோவிலோ, பூஜை அறையிலோ அல்லது நம்முடைய பர்ஸிலோ பண வைக்கும் இடத்திலோ, நகை வைக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும். உங்களுடைய வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது இந்த முடிச்சை அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலய உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நவராத்திரி ஏழாம் நாள் வழிபாடு

இந்த எளிமையான தாந்திரீக வழிபாட்டை முழு மனதுடன் முருகப்பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளாலும் செவ்வாய் பகவானின் அருளாலும் கடன் அற்ற சொந்த வீட்டில் வாழக்கூடிய யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்