- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமை காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

வெள்ளிக்கிழமை காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

- Advertisement -

பெரும்பாலும் நம் எல்லோர் வீட்டிலும் காகத்திற்கு சாப்பாடு வைக்கும் வழக்கம் இருக்கும். நாம் சாப்பிட்ட மீதி சாப்பாட்டை காக்கத்திற்கு வைப்போம். மிச்சம் மீதியான சாப்பாட்டையும் காகத்திற்கு வைப்போம். சைவம் அசைவம் என்று பாரபட்சமில்லாமல் காகம் அந்த உணவை சாப்பிடும். நீங்கள் எந்த உணவை காகத்திற்கு வைத்தாலும் தவறு கிடையாது.

ஆனால் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் பின் சொல்லக் கூடிய முறைப்படி உங்களுடைய வீட்டில் காகத்திற்கு உணவை வைத்துப் பாருங்கள். பிறகு உங்களுடைய குடும்பத்திற்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய கர்ம வினைகள் தீந்து கஷ்டங்களும் குறையும். காகத்திற்கு எந்த சாப்பாட்டை, எப்படி வைப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காகத்திற்கு சாதம் வைக்கும் முறை

வெள்ளிக்கிழமை பொழுது விடியும் போதே உங்களுடைய வீட்டில் சாப்பாடு இருக்க வேண்டும். அது சாத்தியமில்லை. ஆகவே உறங்க செல்வதற்கு முன்பு வியாழக்கிழமை வடித்த சாதத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சமையல் அறையில் வைத்து விடுங்கள்.

வெள்ளிக்கிழமை விடியும் போது உங்கள் சமையல் அறையில்சாதம் இருக்கும். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த சாதத்தை தண்ணீரோடு கொண்டு போய் காக்கத்திற்கு வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை இந்த சாதத்தை சாப்பிட்டு காகம் தன்னுடைய பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொண்டால், உங்கள் குடும்பத்திற்கு பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை மதிய நேரத்திலும் காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வெள்ளிக்கிழமை மதியம் பழைய சாப்பாட்டை காகத்திற்கு வைக்காதீங்க. பச்சரிசி சாதம் வடித்து அதை வாழை இலையில் போட்டு, கொஞ்சம் நெய் உப்பு போட்டு துவரம் பருப்பு சாம்பாரோ அல்லது பருப்போ விட்டு பிசைந்து இந்த சாதத்தை தண்ணீரோடு காகத்திற்கு வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுடைய வீட்டில் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும். உறவுகளுக்குள் சண்டை வராது. வருமானம் எப்போதும் வந்த வண்ணம் இருக்கும். வந்த வருமானம் வீண் செலவுகளும் ஆகாது.

மேல் சொன்ன முறைப்படி ஒரே ஒரு வாரம் மட்டும் பரிகாரத்தை செய்துவிட்டு, ஒரே ஒரு வாரம் மட்டும் காகத்திற்கு சாதத்தை வைத்துவிட்டு என்னுடைய பிரச்சனை தீரவில்லை என்று சொல்லக்கூடாது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் மேல் சொன்ன முறைப்படி காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் நீங்க நவராத்திரி அம்மன் வழிபாடு

குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு வருடமாவது மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றும்போது உங்களுடைய வீட்டில் இருக்கும் பிரச்சனைகளில் வித்தியாசம் தெரிய தொடங்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த நிதி நிலைமைக்கும், ஒரு வருடம் கழித்து இருக்கக்கூடிய நிதிநிலைமைக்கும் நிச்சயம் முன்னேற்றம் வந்திருக்கும். கடன் சுமை குறைந்திருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்