- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் துர்காஷ்டமி வழிபாடு

வெற்றி தரும் துர்காஷ்டமி வழிபாடு

- Advertisement -

நவராத்திரி நாலு வரக் கூடிய ஒவ்வொரு நாட்களும் விசேஷமானது தான். அப்படித் தான் இந்த நவராத்திரியில் வந்திருக்கக்கூடிய துர்காஷ்டமியும். அற்புதமான இந்த நாளில் நாம் துர்க்கை அன்னையை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் உள்ள தோல்விகள் தோல்வி பயம் அனைத்தும் நீங்கி வெற்றி மேல் வெற்றி பெற்று வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோல்வி பயம் நீக்கும் துர்காஷ்டமி வழிபாடு

இந்த வழிபாட்டை இன்றைய தினம் (10. 9 .2024) காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் இன்றைய தினம் அஷ்டமியும் இணைந்து வந்திருப்பது இந்த வழிபாட்டை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை வீட்டில் துர்க்கையின் சிலை வைத்திருப்பவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம் அல்லது ஆலயம் சென்று வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இன்றைய தினம் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாக சொல்லப்படுகிறது.
அதே போல் அன்னைக்கு எலுமிச்சை தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு 9 தீபம் ஏற்ற வேண்டும் இந்த தீபத்திற்கு நாம் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். தீபம் ஏற்றுவதற்கு பஞ்சுத் திரி மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதே போல் அன்னைக்கு வெற்றிலை பாக்கு பழம் மலர்கள் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்வது மேலும் சிறந்தது. அதே போல் அன்னையின் ஆலயத்திற்கு மஞ்சள் குங்குமம் போன்ற மங்களப் பொருட்களை வாங்கி கொடுப்பது நல்லது.

இன்றைய தினம் முழுவதுமே அன்னையை நினைத்து அவருடைய நாமங்களையும் ஸ்தோத்திரங்களையும் சொல்வது நன்மைகளை தரும் இந்த மந்திரமோ அல்லது சூத்திரங்களோ தெரியாதவர்கள் ஓம் துர்க்கையே போற்றி என்ற இந்த மந்திரத்தை 108 முறை அன்னைக்கு முன் அமர்ந்து சொல்லலாம். இதை ஆலயத்திலும் செய்யலாம் அல்லது வீட்டிலும் தீபம் ஏற்றி வைத்து அன்னையை மனதார நினைத்தும் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

ஆலயம் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டில் அன்னைக்கு முன் வெற்றிலை பாக்கு பழம் வைத்து அத்துடன் எலுமிச்சை பழத்தை ஐந்து எண்ணிக்கையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். இப்படி வழிபாடு செய்யும் பொழுது புளி சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம். துர்க்கை என்றாலே தோல்வி பயத்தை நீக்கி வெற்றியைத் தருபவர் அப்படியான ஆற்றல் மிக்க இந்த அன்னையை அவருக்கு உகந்த இந்த நாளில் இப்படி வழிபாடு செய்வது அவரின் பரிபூரண அருளை நாம் முழுவதுமாக பெறுவதற்கு உதவி புரியும்.

வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்பவர்கள் எப்பொழுதும் போல் தாங்கள் செய்யும் வழிபாட்டுடன் இதையும் சேர்த்தே செய்யலாம். இதில் குறிப்பானது அன்னைக்கு எலுமிச்சை பழத்தை தருவதும் இந்த மந்திரத்தை ஜெபிப்பதும் தான். இந்த பழிப்பாடும் மந்திரமும் உங்களை மேலும் மேலும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி குபேரருக்கு உகந்த வியாழக்கிழமையில் இந்த துர்காஷ்டமி வழிபாடு செய்யும் பொழுது குபேரரின் அருளையும் சேர்த்து பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:நவராத்திரி எட்டாம் நாள் செய்ய வேண்டிய வழிபாடு
நவராத்திரியில் அன்னைகளின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு குபேரரின் அருளும், துர்க்கையின் ஆசியும் முழுவதுமாக பெற இந்த வழிபாடு நிச்சயம் துணை நிற்கும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்
வெற்றி தரும் துர்காஷ்டமி வழிபாடு

சற்று முன்