நவராத்திரி வழிபாடுகளில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அன்னையும் வழிபாடு செய்வோம். அந்த வகையில் நாளைய தினம் நவராத்திரியில் எட்டாவது நாள் இந்த தினத்தில் நாம் தேவியை நரசிங்க தாரணியாக வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் உள்ள எதிரி தொல்லை தீய சக்திகளின் இன்னல்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு
இந்த வழிபாட்டை நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது சிறந்தது. முடியாதவர்கள் ஏழு மணிக்கு மேல் 11 மணிக்குள் செய்து விடுங்கள். மாலை நேரத்தில் செய்பவராக இருந்தால் 5 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். ஒரு வேளை வீட்டில் கொலு வைத்து இருந்தால் அவர்கள் மட்டும் காலை மாலை இரண்டு வேலையும் இந்த வழிபாடு செய்ய வேண்டும்.
நாளைய தினம் அன்னையை நரசிங்க தாரணியாக வழிபட வேண்டும். நரசிங்கர் என்றாலே தீமைகளை அழிக்க கூடியவர் அப்படியானவரை நாம் வணங்கும் பொழுது நம்முடைய எதிரி தொல்லை தீமை அழிவது மட்டுமின்றி புத்தி கூர்மை ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டிற்கு நாம் ரோஜா மலர்களை பயன்படுத்தி வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு மருதாணி இலைகளை பயன்படுத்தலாம். இதைத் தவிர்த்து வாசனை நிறைந்த பூக்கள் எதுவாயினும் பயன்படுத்தலாம். அதே போல் நவராத்திரி எட்டாம் நாள் தாமரை கோலம் போட வேண்டும் அதாவது தாமரை பூவை பச்சரிசி மாவால் கோலமாக பூஜை அறையில் போட வேண்டும்.
நெய்வேத்தியமாக பால் சாதம், பால் பாயாசம் போன்றவற்றை வைக்கலாம். அத்துடன் மொச்சை பயிரை வைத்தும் வழிபடலாம். இதை வைத்து வழிபட முடியாதவர்கள் பழ வகைகளை வைத்து வழிபடலாம். அதே போல் நாளைய தினம் சுமங்கலி பெண்களை மூன்று ஐந்து ஒன்பது என்ற எண்ணிக்கையில் அழைத்து தாம்பூலம் கொடுத்து வழிப்பட வேண்டியது அவசியம். அப்படி வழிபடும் பொழுது முடிந்தால் பச்சை நிறத்தை பயன்படுத்துங்கள். அதாவது சுமங்கலி பெண்களுக்கு பச்சை நிறத்திலான வஸ்திரத்தை கொடுப்பது சிறந்தது. நீங்களும் பச்சை நிறத்தை பயன்படுத்துவது சிறந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் உங்களுக்கு தெரிந்து நரசிங்க தாரணி மந்திரங்களை சொல்லலாம். அத்துடன் “ஓம் நரசிங்க தாரணையே நமக” என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த ஒரு மந்திரமும் நாம் செய்யும் பூஜைகளும் நம்முடைய குடும்பத்தில் உள்ள அனைத்து இன்னல்களையும் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தொழில் லாபகரமாக நடக்க வழிபாடு
நவராத்திரியில் ஒன்பது நாளும் விசேஷமானது தான் இதில் ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளுக்குரிய தேவைகளை வழிபடும் போது அது மேலும் விசேஷமானதாக மாறுகிறது. அப்படியாக நாளைய தினத்தில் இந்த முறையில் வழிபாடு செய்யும்ஸபொழுது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் அன்னையை வழிபட்டு பலன்களை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.