- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிப்பாட்டு முறை

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிப்பாட்டு முறை

- Advertisement -

நவராத்திரி என்றாலே அம்பிகையை 9 நாட்களும் வழிபாடு செய்யும் திருவிழா என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நாட்களும் அம்பிகையை ஒவ்வொரு பெண் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபாடு செய்வோம். இந்த ஒன்பது நாட்களும் அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை எடுத்த அவதாரங்களை குறிக்கக் கூடியது என்று கூறப்படுகிறது. அவ்வாறு அம்பிகை அவதாரம் எடுக்கும் பொழுது ஏந்திய ஆயுதங்களை அசுரனை வதம் செய்த பிறகு அதை சாந்தப்படுத்தும் விதமாக நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அதற்கு அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து வழிபாடு செய்தார்கள். அதனால் தான் அன்றைய தினத்தை நாம் ஆயுத பூஜை என்று கொண்டாடுகிறோம். இந்த ஆயுத பூஜையை நாம் வீட்டில் எந்த முறையில் செய்தால் நம் வீட்டில் செல்வமும் செல்வாக்கும் உயரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆயுத பூஜை வழிப்பாட்டு முறை

வீட்டில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருள்களாலும் நமக்கு ஆபத்துகள் என்பது ஏற்படும். அந்த ஆபத்துகள் ஏற்படாமல் நல்ல முறையில் அந்த பொருட்களை பயன்படுத்தி நாமும் நன்றாக வாழ்வதற்கு வருடத்திற்கு ஒருமுறை அந்த பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வோம். அந்த நாளை தான் நாம் ஆயுத பூஜை என்று கூறுகிறோம். அதே போல் படிக்கும் பிள்ளைகள் தங்களுடைய படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதனால் தான் ஆயுத பூஜை என்று சொல்லக்கூடிய அதே நாளை நாம் சரஸ்வதி பூஜை என்றும் கூறுகிறோம். இந்த இரண்டு பூஜைகளையும் ஒரு சேரதான் செய்வோம் என்பதால் இதற்கு தனித்தனியாக எந்தவித வழிபாட்டு முறைகளும் கிடையாது.

- Advertisement -

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து வாசனை மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் நம் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். படிக்கும் பிள்ளைகள் தங்களுடைய படிப்பு தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

பிறகு அந்த பூஜை அறையில் ஒரு வாழை இலையை விரித்து அதில் அவல், பொரி, கடலை, சர்க்கரை பொங்கல், சுண்டல் வகை, பழங்கள், தேங்காய், இனிப்பு போன்றவற்றை படையலாக போட்டு அம்பிகையின் போற்றிகளை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாளைய தினம் அதாவது அக்டோபர் மாதம் 11ஆம் நாள் காலை 9 மணியிலிருந்து 10:25 மணிக்குள்ளும் மதியம் 12:15 இல் இருந்து 1:15 வரை அல்லது 1:45 லிருந்து 2:45 வரை அல்லது மாலை 5 மணியிலிருந்து 8:30 மணி வரை இதில் எந்த நேரத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தி இந்த வழிபாட்டை செய்யலாம். தொழில் ஸ்தாபனங்களில் வழிபாடு செய்பவர்களும் இந்த நேரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்றைய தினத்தில் நாம் சரஸ்வதி அஷ்டோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அதுவும் படிக்கும் பிள்ளைகள் பாராயணம் செய்து அர்ச்சனை செய்வதன் மூலம் அவர்களுக்கு படிப்பு தொடர்பான நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல்
“வத வத வாக் தேவியே நமஹ”
என்னும் மந்திரத்தை குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் 108 முறை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய அனைவருக்கும் நல்ல புத்தி ஏற்படும், எதை செய்வதாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இன்றைய நாளில் நாம் உபயோகப்படுத்தும் கைப்பேசி முதற்கொண்டு அனைத்து பொருட்களையும் தெய்வமாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் நம்முடைய வண்டி வாகனங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து அதற்கும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த முறையில் நாம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை செய்வதன் மூலம் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும், நமக்கு செல்வாக்கு உயரும், மேலும் படிக்கும் பிள்ளைகள் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், தொழில் செய்பவர்கள் அவர்களுடைய தொழிலை சிறப்பாக செய்து லாபங்களை பெறுவார்கள.

இதையும் படிக்கலாமே:நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாடு

இந்த எளிமையான வழிபாட்டு முறையை ஒவ்வொருவரும் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்திச் செல்லலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்