நிறைய பேருக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களால் தொடர்ந்து படிக்க முடியாது. ஏதாவது ஒரு பிரச்சனை வந்து படிப்பை தடைப்படுத்தும். படிப்புக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோமே. ரொம்பவும் திறமைசாலியாக இருக்கும் ஒரு மாணவனுக்கு, படிப்பதற்கு வசதி இருக்காது. பன்னிரெண்டாவது வரை படித்திருப்பான்.
அதற்கு மேலே டாக்டராக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான தகுதியும் அவனிடத்தில் இருக்கும். அதற்கான மதிப்பெண்ணும் அவனிடத்தில் இருக்கும். ஆனால் படிப்பதற்கான சூழ்நிலை இருக்காது. அவனுடைய படிப்பு பன்னிரண்டாவதிலேயே தடைப்பட்டுவிடும். அதற்கு மேலே சாதாரணமாக ஒரு டிகிரியை கூட படிக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு நிலவும்.
இது போல தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை படிப்புக்கு வந்து முட்டுக்கட்டை போடும். சில பெண்களுக்கு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கல்யாணம் கூட செய்து வைப்பார்கள். உங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையிலும் இதுபோல ஏதாவது பிரச்சனை இருந்தால், உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கு ஏதாவது முட்டுக்கட்டை வருவது போல இருந்தால், அந்த தடையை தகர்ப்பதற்கு இன்று செய்ய வேண்டிய பிள்ளையார் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
படிப்பில் இருக்கும் தடை விலக பிள்ளையார் வழிபாடு
பெற்றவர்கள் பிள்ளைகளுக்காக இந்த வழிபாட்டை செய்தால், உங்களுடைய பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய அந்தக் கல்வித் தடையானது விலகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நவராத்திரியின் நிறைவு நாள். நவராத்திரியின் பத்தாவது நாள் விரயதசமி. இன்றைய நாளில் இந்த வழிபாட்டை செய்தால் இந்த வழிபாட்டிலும் உங்களுக்கு 100% வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொஞ்சமாக குங்குமம் எடுத்து அதில் தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடிக்க வேண்டும். வெற்றிலையின் மீது குங்குமத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து அருகம்புல் போட்டு அந்த பிள்ளையாருக்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து, இரண்டு வாழைப்பழம், நெய்வேதியமாக வைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
என்னுடைய பிள்ளைக்கு இருக்கக்கூடிய கல்வித் தடை விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளவும். இன்று மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் செய்யலாம். இன்று தொடங்கி மூன்று நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு தீராத தோஷங்கள் தீர பரிகாரம்
மூன்று நாட்களும் அதே குங்குமப்பிள்ளையாரே இருக்கட்டும். தினமும் குங்கும பிள்ளையாரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் ஒரு பழம் நெய்வேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்து கொள்ளவும். மூன்றாவது நாள் வழிபாட்டை நிறைவு செய்து அந்த பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து விடுங்கள். நிச்சயம் உங்களுடைய பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய கல்வித் தடையானது விலகிவிடும் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.