- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐப்பசி செவ்வாய் துர்க்கை வழிபாடு

ஐப்பசி செவ்வாய் துர்க்கை வழிபாடு

- Advertisement -

ஐப்பசி மாதம் குபேர மாதம். ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு உரிய மாதம். ஐப்பசி மாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம் என்று சொல்லுவார்கள். இப்படி அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்யக்கூடிய இந்த மாதத்தில், குலதெய்வ வழிபாட்டையும், அம்பாள் வழிபாட்டையும் மேற்கொள்வது சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று ஐப்பசி மாதத்தில் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை, கூடவே சஷ்டி திதியும் இருக்கிறது. அம்பாளையும் முருகப்பெருமானையும் ஒரு சேர வழிபட நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் காணாமலேயே போய்விடும்.

- Advertisement -

செவ்வாய் துர்க்கை வழிபாடு

ஒரு சிலர் வாழ்வில் பிரச்சினை வருவதற்கு ஜாதக கட்டம் காரணமாக இருக்கலாம். நல்ல நேரம் கெட்ட நேரம் காரணமாக இருக்கலாம். இதைல்லாம், ஒரு காலகட்டத்தில் தானாக சரியாகிவிடும். ஆனால் ஒரு சிலருக்கு பிரச்சனை வர கண் திருஷ்டியும், எதிர்மறையாற்றலும், ஏவல் பில்லி சூனியமும் காரணமாக இருக்கும்.

வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடக்கூடிய அளவுக்கு உங்களுக்கு எதிர்மறை ஆற்றலால் பிரச்சனை இருக்கிறது, என்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் என்னுடைய கைக்கு உட்பட்டு இல்லை, எல்லாம் ஒரு எல்லையைத் தாண்டி நடக்கிறது, என்ற கஷ்டம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். அப்படி அமானுஷ்ய சம்பவங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

வாழ்வே சூனியம் பிடித்தது போல இருக்கிறது என்றால், இன்று மாலை இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களை பிடித்த எதிர்மறை ஆற்றல் அனைத்தும் ஒரே நாளில் விலகும். அதுவும் இந்த பரிகாரத்தை செய்த ஒரே நிமிடத்தில் விலகிவிடும்.

முதலில் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாடு செய்து விடுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி பூஜையறையில் வைத்து விட வேண்டும். பூஜை அறையில் இருந்து அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு உங்கள் கையால் சிவப்பு நிறக் குங்குமத்தை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். முடிந்தால் குங்கும அர்ச்சனையும் செய்யலாம். செவ்வரளி பூக்களை மாலையாக கட்டிக் கொண்டு போய் போடுங்கள். துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.

உங்கள் கையில் எடுத்து சென்ற  எலுமிச்சம் பழத்தை, உங்கள் தலையை 3 முறை சுற்றுங்கள். பிறகு உச்சந்தலையில் இருந்து உள்ளங் கால் வரை ஏற்ற இறக்கமாக மூன்று முறை, ஏற்றி இறக்கி, என்னை பிடிக்க எதிர்மறை சக்தி எல்லாம் இன்றோடு என் உடம்பை விட்டு விலக வேண்டும், கண் திருஷ்டி விலக வேண்டும், ஏவல் பில்லி சூனியம் விலக வேண்டும், என்று சொல்லி, கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை அந்த திரிசூலத்தில் குத்தி விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.

இதை செய்துவிட்டு துர்க்கை அம்மன் முன்பாக துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக மண்டியிட்டு பெண்களாக இருந்தால் மடிப்பிச்சை கேளுங்கள். அதாவது உங்களுடைய முந்தானையை ஏந்தி, என்ன வரம் வேண்டுமோ, கேட்டீர்கள் என்றால் நிச்சயம் அது கிடைக்கும். நீங்கள் சுடிதார் அணிபவர்களாக இருந்தால் உங்கள் துப்பட்டாவை ஏந்தி இந்த வரத்தை கேட்கலாம்.

ஆண்களாக இருந்தால், இரண்டு கைகளையும் ஏந்தி மண்டியிட்டு வரத்தை கேட்டால், நிச்சயம் நீங்கள் கேட்ட வரத்தை துர்க்கை அம்பாள் இன்று உங்களுக்கு கொடுத்து விடுவாள். இந்த எளிமையான பரிகார முறையை எவர் ஒருவர் முழு நம்பிக்கையோடு செய்கிறீர்களோ, அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலால் பிரச்சனைகள் என்பது வராது.

இதையும் படிக்கலாமே: ஐப்பசி முதல் செவ்வாய் குலதெய்வ வழிபாடு

இந்த செவ்வாய் கிழமை மட்டும் அல்ல, அடுத்தடுத்து வரக்கூடிய வேறு எந்த செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்தாலும் உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். துர்க்கை அம்பாளின் ஆசி கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்