- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதேய்பிறை அஷ்டமி திதி இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி திதி இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

உங்கள் தலைக்கு மேலே இருக்கக்கூடிய கஷ்டம் என்ன என்று ஒரு நபரை போய் கேட்டால், முதலில் அவர் சொல்வது பணக்கஷ்டம். பெரும்பாலான நபர்களுக்கு இப்போது பணம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு சில மனிதர்களுக்கு மன கஷ்டமும், எதிரி பிரச்சனையும், ஆரோக்கிய பிரச்சனையும் இருக்கும். பணக்கஷ்டம் என்றால் அதில் கடன் சுமையும் அடங்கிவிடும்.

ஆக மொத்தம் இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், என்ன செய்வது. பிரச்சினைகளுக்கான தீர்வை விரைவில் பெற, ஆன்மீகம் சார்ந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி திதி பரிகாரம்

இன்று வியாழக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதி வந்திருக்கிறது. சில பேர் பைரவர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டி வழிபாடு செய்திருக்கலாம். சில பேருக்கு பைரவர் கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமைந்திருக்காது. எப்படியாக இருந்தாலும் சரி இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு சமையலறையில் இருந்து 3 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள்.

அந்த மூன்று மிளகை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு ‘பைரவா என் வாழ்க்கையில் பின்தொடரும் கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைய வேண்டும், கடன் சுமை எதிரி தொல்லை காணாமல் போக வேண்டும், வாழ்க்கையில் நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும், கர்ம வினை குறைய வேண்டும்’ என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது தவிர உங்களுக்கு வேறு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை இருந்தால் அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி பைரவரை வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு கையில் இருக்கும் மிளகை உங்கள் தலையை 3 முறை சுற்றி, சின்னதாக இருக்கும் வெள்ளை துணியில் இந்த 3 மிளகை வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். காட்டன் துணியாக இருக்கட்டும். அந்த துணி யாரும் பயன்படுத்தாத புதிய துணையாக இருக்க வேண்டும். இட்லி துணி இருக்கும் அல்லவா வீட்டில் புதுசு, அதைக்கூட எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இந்த முடிச்சை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

குடும்ப தலைவன் தலைவி யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இன்று இரவு மட்டும் கொஞ்சம் தனியாக படுத்துக் கொள்ளுங்கள். மெத்தையில் படுத்தாலும் சரி, பாய் விரித்து படுத்தாலும் சரி, மறுநாள் காலை எழுந்தவுடன் இந்த முடிச்சை ஒரு மண் அகல் விளக்கில் வைத்து, ஒரு கற்பூரம் வைத்து நெருப்பில் கொளுத்தி விடுங்கள்.

- Advertisement -

அந்த மிளகு துணி எரிந்து சாம்பலானதும் அதை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விட்டு, பிறகு சென்று குளித்து விடுங்கள். வீட்டிற்கு கொஞ்சம் வெளி பக்கமாக, விரண்டா, மொட்டை மாடி போன்ற இடங்களில் இந்த பொருளை வைத்து எரிப்பது சிறப்பு. இல்லை என்றால் வீட்டிற்கு உள்ளேயே வரவேற்பரையில் ஓரமாக இதை வைத்து தெந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பூர்வீக சொத்து கிடைக்க பரிகாரம்

உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நெருப்போடு நெருப்பாக அந்த பைரவர் பஸ்பம் ஆக்கிவிடுவார். இந்த எளிய தாந்த்ரீக பரிகாரம் உங்கள் கர்ம வினை குறைத்து, கஷ்டங்களை குறைக்க கூடிய வேலையை எளிமையாக செய்து விடும். அதி அற்புதம் வாய்ந்த இந்த ஆன்மீகம் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்