ஒருவர் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணம் தன்னுடைய அடுத்தடுத்த சந்ததியினருக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த சொத்துக்களை இழந்து போய் விடுவது உண்டு. பூர்வீக சொத்துக்கள் கிடைக்காமல் போகவும் சிலருக்கு நேரிடும். இப்படி இழந்த மற்றும் பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? என்பது போன்ற தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
ஆன்மீக ரீதியாக ஒருவர் பூர்வீக சொத்துக்களை மீட்டெடுக்க துணை புரிபவர் முருகப்பெருமான் ஆவர். முருகனை வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் இழந்த மற்றும் பூர்வீக சொத்துக்கள் கிடைக்க திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கவல்லது.
முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அவ்வளவு எளிதாக அடுத்த தலைமுறைக்கு செல்வதில்லை. அடுத்த தலைமுறையினர், அடுத்த வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பொழுது சேர்த்து வைத்த சொத்துக்கள் யாருக்குத் தான் காத்திருக்கிறது? என்பது தெரிவதில்லை. துன்பப்படும் வேளையில் உதவாத சொத்துக்கள் எதற்கு என்று எண்ணுவோர், இந்த பரிகாரத்தை செய்யுங்கள் பூர்வீக சொத்துக்கள் உங்கள் கை தேடி வரும்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் படம் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இந்த பரிகாரத்தை எளிமையான முறையில் நீங்கள் செய்யலாம். முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து சந்தன, குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டு நிறைய செவ்வரளி பூக்களை எடுத்து வையுங்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் இது போல தயாரித்து வைத்து காலையில் குளித்து முடித்து சுத்தபத்தமாக “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்த படி 108 முறை செவ்வரளி பூக்களால் முருகப் பெருமானை அர்ச்சனை செய்யுங்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் அர்ச்சனை செய்து 27 வாரங்கள் தொடர வேண்டும். 27 வாரங்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை செவ்வரளி மலர்களால் 108 முறை “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தோடு அர்ச்சனை செய்து வழிபட்டு மனதார உங்கள் சொத்துக்கள் திரும்ப கிடைக்க பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இப்படி பிரார்த்தனை செய்யும் பொழுது இழந்த சொத்துக்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு கிடைக்காத பூர்வீக சொத்துக்களாக இருந்தாலும் சரி, உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே:
பயம் போக்கும் துர்க்கை அம்மன் மந்திரம்
“நாளை கிடைக்க இருக்கும் பலாக்காயை விட, இன்றைய கலாக்காய் சிறந்தது” என்று ஒரு பழமொழி இருக்கும். இன்று நீங்கள் துன்பப்படும் வேளையில் பயன்படாத சொத்துக்கள் எதுவும் நாளை உங்கள் சந்ததியினரை வாழ வைக்கப் போவதில்லை. உங்களுடைய தொழில் முன்னேற்றத்திற்கு, பொருளாதார தேவைகளுக்கு சொத்துக்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ, அப்படி பயன்படுத்தி முன்னேற பாருங்கள். நீங்கள் முன்னேறினால் தான், அடுத்த சந்ததியினரும் முன்னேறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாருடைய சொத்திற்கும் ஆசைப்படக்கூடாது. சொத்துக்கள் என்பது புண்ணிய, பாவங்கள் போன்றது. அடுத்தவர்களுடைய புண்ணிய, பாவங்களை நீங்கள் சுமக்க ஆசைப்பட்டால், அது உங்களை மட்டும் அல்லாமல், உங்களுடைய சந்ததியினரையும் வழிவழியாக பாதிக்கும். பிறன்மனை நோக்குவதும், பிறர் சொத்து மீது ஆசைப்படுவதும் பொல்லாத பாவத்தை சேர்க்கும்.