ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை திரியோதசி திதியை தனதிரியோதசி என்று கூறுவோம். அன்றைய தினத்தில் தான் தன்வந்திரி அவதரித்தார் என்பதால் அன்றைய தினத்தை தன்வந்திரி ஜெயந்தி என்றும் கூறுவது உண்டு. அன்றைய நாளில் மாலை நேரத்தில் லட்சுமி குபேரர் பூஜை செய்வது தன விருத்தியை அதிகரிக்கும் என்றும் வடமாநிலத்தை சேர்ந்த அனைவரும் இந்த வழிபாட்டை செய்வார்கள் என்றும் அதிலும் குறிப்பாக மார்வாடிகள் தவறாமல் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் வாங்க வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செல்வம் சேர பொருட்கள்
பொதுவாக நம்முடைய தமிழ்நாட்டில் தீபாவளியை ஒரு நாள் மட்டும் கொண்டாடுவோம். ஆனால் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஐந்து நாட்கள் தீபாவளியை கொண்டாடுவார்கள். அதில் முதல் நாள் தான் இந்த தனதிரியோதசி. இதில் குறிப்பாக மார்வாடிகள் இந்த நாளை தவறவிட்டதே கிடையாது என்று கூறலாம். நாம் எப்படி அக்ஷய திதி அன்று வாங்கும் பொருட்கள் பல் மடங்கு பெருகும் என்று நினைக்கிறோமோ அதே போல் மார்வாடிகள் இந்த நாளில் வாங்கக்கூடிய பொருட்கள் பல மடங்கு பெருகும் என்று நினைப்பார்கள், நினைப்பதோடு மட்டுமல்லாமல் வாங்கவும் செய்வார்கள்.
மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களாக சில பொருட்கள் திகழ்கின்றன. அந்த பொருட்களில் குறிப்பிடத்தக்க பொருட்களை தனதிரியோதசி அன்று வாங்கி பூஜையில் வைத்து வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். அதிலும் குறிப்பாக மாலை 6:31 மணியிலிருந்து 8:13 மணிக்குள் கீழ்வரும் பொருட்களின் ஏதாவது ஒரு பொருளையாவது நாம் வாங்கி வைத்தோம் என்றால் லட்சுமி குபேரரின் அருளால் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
இதில் முதலிடத்தை வகிக்கக்கூடியது வெள்ளி பொருட்கள். வெள்ளி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது என்பதால் வெள்ளியால் ஆன ஏதாவது ஒரு சிறிய பொருளையாவது அந்த நேரத்தில் வாங்கி வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். வசதி மிக்கவர்களாக இருக்கும் பட்சத்தில் தங்கைகளையும் வாங்கலாம். அடுத்ததாக நாம் வாங்க வேண்டியது துடைப்பம். துடைப்பத்தில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஏற்கனவே துடைப்பம் இருந்தாலும் புதிதாக ஒரு துடைப்பத்தை வாங்கி வந்து வைக்க வேண்டும்.
அதற்கு அடுத்தார் போல் ஆடைகளை வாங்கலாம் அதிகம் குறிப்பாக பட்டு துணிகளை வாங்குவது சிறப்பு தரும். மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட கல் உப்பு, தேன், ஏலக்காய், மஞ்சள் கிழங்கு, திருமஞ்சன பொடி, நெய், கற்கண்டு போன்றவற்றை வாங்கி வந்து வைக்கலாம். இதோடு சந்தனம் வாசம் அல்லது மல்லிகை பூ வாசம் மிகுந்த வாசனை திரவியங்களை வாங்கி வந்து வைப்பதும் மகாலட்சுமியின் அம்சத்தை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாங்குவது என்பது சிறப்பு. ஒருவேளை இந்த நேரத்தில் வாங்க முடியவில்லை என்பவர்கள் அன்று மதியம் 12 மணி 21 நிமிடத்தில் இருந்து திரியோதசி திதி ஆரம்பிக்கிறது. திதி ஆரம்பித்த பிறகு வரக்கூடிய நேரங்களில் எந்த நேரம் தங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் மேற்சொன்ன பொருட்களில் இருந்து ஏதாவது ஒரு பொருளை வீட்டிற்கு வாங்கி வந்து வைக்கலாம்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர ஐப்பசி பிரதோஷ வழிபாடு
இந்த பொருட்களில் எந்த பொருட்களை தங்களால் வாங்க இயலுமோ அதை வாங்கி வைத்து மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் லட்சுமி குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.