- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகந்த சஷ்டி விரதத்தின் பலனைப் பெற செய்ய வேண்டியது

கந்த சஷ்டி விரதத்தின் பலனைப் பெற செய்ய வேண்டியது

- Advertisement -

முருகப்பெருமானின் விரதங்களில் மிகவும் முக்கியமான ஒரு விரதமாக திகழ்வது கந்த சஷ்டி விரதம். இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதம் ஆகும். இதற்குரிய விரதமுறையை பல விதங்களில் பலரும் பின்பற்றுவார்கள். அப்படி பின்பற்றுவதன் மூலம் முருகப்பெருமானின் அருளை பெறுவதோடு வேண்டிய வரத்தையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது. தங்களால் விரதம் இருக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்களும் விரதம் இருக்கும் வகையில் உடல் சூழ்நிலை இல்லாதவர்களும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலேயே முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்த சஷ்டி விரதத்தின் பலனைப் பெற 

கந்த சஷ்டி விரதம் இருப்பதன் மூலம் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இருப்பவர்களுக்கு அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் குழந்தைகளுக்கு நல்ல அறிவு, ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும், இன்பமான வாழ்க்கை அமையும் என்றும் கூறுவது உண்டு. இதோடு நமக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் விலகும் என்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட முடியும், மனம் தெளிவு பெறும் என்று நாம் இந்த விரதத்தின் பலனை கூறிக் கொண்டே செல்லலாம். இந்த பலனை பெறுவதற்கு ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கந்த சஷ்டி விரதத்தை தான் மேற்கொள்ள வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி விரதத்தை மேற்கொண்டாலும் இந்த பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருக்க இயலாதவர்கள் செய்ய வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

கந்த சஷ்டி விரதம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கந்த சஷ்டி கவசம் தான். இந்த கவசத்தை தினமும் படிக்க வேண்டும். விரதம் இருக்க இயலவில்லை என்றாலும் கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் அன்று ஒரு முறையும், இரண்டாவது நாள் அன்று இரண்டு முறையும், மூன்றாவது நாள் அன்று மூன்று முறை என்று ஆறாவது நாள் ஆறு முறை என்ற வீதத்தில் தொடர்ச்சியாக தினமும் படித்து வர முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு நம்மால் இயன்ற அளவு உழவாரப்பணி மேற்கொள்வதன் மூலமும் முருகப்பெருமானின் அருளை பெற முடியும். அதே சமயம் முருகப்பெருமானுக்கு இந்த ஆறு நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது நம்மால் இயன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கி தருவதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதே போல் முருகன் ஆலயத்தில் அன்னதானம் செய்வதும், முருகன் பக்தர்களுக்கு பச்சை நிற ஆடை தானம் செய்வதும் சிறப்பு கூறியதாகும். மேலும் முருகன் கோவிலில் வேல் வாங்கி தானம் தருவதும் முருகன் சிலையை வாங்கி வறுமையில் இருப்பவர்களுக்கு பூஜை செய்வதற்காக தானம் தருவதும் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வதற்குரிய முழுமையான பலனை பெற உதவும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கந்த சஷ்டி மந்திர வழிபாடு
இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது வசதி இருப்பவர்கள் அனைத்தையும் மேற்கொள்வதன் மூலம் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டதற்க்குரிய முழுமையான பலனை பெறுவதோடு முருகப்பெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்